1. Home
  2. தமிழ்நாடு

இன்று வைகாசி அமாவாசை : இன்று இந்த மந்திரத்தை 101 முறை சொல்ல வேண்டும்...!

1

வைகாசி மாதம் தேய்பிறையில் வரும் அமாவாசை அன்று விரதம் இருந்தால் பித்ரு சாபம் நீங்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் இந்த வருடம் வைகாசி மாத அமாவாசையானது நேற்று ஜூன் மாதம்  5ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கியது. இந்த திதி இன்று  ஜூன் 6ஆம் தேதி வரை உள்ளது.

வைகாசி மாதம் வரும் அமாவாசை மிகவும் சிறப்பானது. வளங்களை அள்ளித் தரக்கூடியது. மாதவ மாதம் என்றும் வைகாசம் என்றும் இந்த மாதத்தை அழைப்பார்கள். வைகாசி மாதத்தில் புனித நதியில் நீராடிவிட்டு மகா விஷ்ணுவிற்கு துளசி இலைகளைக் கொண்டு பூஜை செய்வோருக்கு நற்பேறு கிடைக்கும் என விஷ்ணு புராணம் கூறுகிறது.

வைகாசி மாதம் வரும் அமாவாசையில் முன்னோர்களை வழிபாட்டால் சுபிட்சம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

இன்றைய தினம் பசுவுக்கு பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம் கலந்து தானமாக வழங்கினால் கோமாத அருள் நிறைவாகக் கிட்டும். மேலும் வைகாசி அமாவாசை வழிபாடு நீண்ட ஆயுள், செல்வ வளம், குழந்தை பாக்கியம் தரும்.

அமாவாசை தினத்தில் ஆண்கள் விரதமிருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதே சமயம் சுமங்கலி பெண்கள் கண்டிப்பாக அமாவாசை விரதம் இருக்கக்கூடாது என்று சாஸ்திரம் சொல்லுகிறது. பெண்கள் அமாவாசை விரதம் இருப்பதில் சில விதிமுறைகள் நிறைந்திருக்கிறது. முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை மதிய உணவிற்கு சமைத்து அதை மறைந்த முன்னோர்களின் புகைப்படங்களுக்குப் பொட்டு வைத்து, பூ வைத்து படைக்க வேண்டும். அவ்வாறு சமைக்கும் காய்கறிகளில் சிலவற்றை பயன்படுத்தக்கூடாது.   அதேப்போன்று சில காய்கறிகளை சேர்த்து சமைத்தால் வீட்டிற்கு நன்மையை உண்டாக்கும் என்பது ஐதீகம்.

காலையில் சீக்கிரம் எழுந்து சிவன், விஷ்ணுவை வணங்க வேண்டும்.

பூமியில் ஒரு ஸ்பூன் பால் ஊற்ற வேண்டும். அது உங்கள் வாழ்வில் இடையூறுகளை தாண்டிவர உதவும்
சனி கோயிலில் கடுகு எண்ணெய், கருப்பு உளுந்து, இரும்புத் துண்டு, நீல மலர் தானமாகக் கொடுத்து வணங்கவும் சனி மந்திரத்தை 101 முறை ஜெபிக்கவும்   'Om Nilanjansamabhas Ravuputra Yamagrajam. Chayamartandsambhut Namami Shanaishchara’ என்பது தான் அந்த மந்திரம். இது கோபம், கெட்ட பலன்கள் ஆகியனவற்றை நீக்கும்.

பசு மாட்டுக்கு பழங்கள் வழங்கலாம். இதனால் குடும்பத்தில் அமைதியும், ஒற்றுமையும் ஓங்கும். நீரில் எள்ளை கரைத்து வேண்டிக் கொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like