1. Home
  2. தமிழ்நாடு

இன்று வார இறுதி நாள்... இன்றும் உயர்ந்த தங்கம் விலை; சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு..!

1

தமிழகத்தில் கடந்த நவ.,03ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90,800க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11.350க்கு விற்பனை ஆனது.
 

நவ., 04ம் தேதி ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,250க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.165க்கு விற்பனை செய்யப்பட்டது.

நவ.,05ம் தேதி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.89,440க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.11,180க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.163க்கு விற்பனை செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் (நவம்பர் 6), ஆபரண தங்கம் கிராம், 11,320 ரூபாய்க்கும், சவரன், 90,560 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 165 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (நவ.,07) தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் குறைந்து, 11,270 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 400 ரூபாய் சரிவடைந்து, 90,160 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
 

இந்நிலையில், வார இறுதி நாளான இன்று (நவ.,08) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,300க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.165க்கும் ஒரு கிலோ ரூ.1,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like