இன்று ஐப்பசி அமாவாசை..! எந்த நேரத்தில் திதி கொடுக்க வேண்டும்?
ஐப்பசி மாதம் அமாவாசை திதி கொடுக்க வேண்டிய மாதங்களில் முக்கிய மாதமாகும். பித்ரு கடன் தீர்க்க, சூரியன் ஜாதகத்தில் பலம்பெற ஐப்பசி அமாவாசை அன்று திதி கொடுப்பது அவசியம்.
ஐப்பசி அமாவாசைக்கு, வெள்ளிக்கிழமை அன்று நண்பகலுக்குள் திதி கொடுக்கலாம். வெள்ளிக்கிழமை 10:30 மேல் ராகு காலம் வரும் என்பதால், காலையில் திதி கொடுப்பது நல்லது.ஐப்பசி மாத அமாவாசை அக்டோபர் 31, 2024 மாலை 4 மணிக்கு மேல் தொடங்கி நவம்பர் 1, 2024 மாலை 3 வரை நீடிக்கிறது.