இன்று ஆடி மாத பிரதோஷம்.. சிவனின் பரிபூரண அருளை பெறும் நாள்..!
ஆடி மாதத்தில் வரும் பிரதோஷம் மேலும் சிறப்பாகும். ஒவ்வொரு பிரதோஷமும் ஒவ்வொரு சிறப்பை கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது. அப்படி ஆடி மாதத்தில் வரக்கூடிய பிரதோஷம் மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது.
ஆடி மாதத்தில் அம்மனுக்கு வழிபாடு மிகவும் சிறப்பாக இருக்கும். அப்படி இருக்க இந்த பிரதோஷத்திருநாளில் அம்மனே சிவபெருமானை வழிபாடு செய்து வரங்களைப் பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.
இந்த சிறப்பு மிகுந்த நாளில் சிவபெருமானின் வழிபட்டால் வாழ்க்கையில் அனைத்து துன்பங்களும் விலகும் எனக் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் வீட்டிற்குக் கூடிய சிவபெருமானின் திருக்கோயில்களில் இந்த சிறப்பு மிகுந்த நாளில் விசேஷ பூஜைகள் நடைபெறும்.இந்தப் பிரதோஷ பூஜைகளில் கலந்து கொண்டால் ஜென்ம பாவங்கள் அனைத்தும் விலகும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த திருநாளில் நந்தி தேவனை வணங்கி விட்டு அதன் பின்னர் சிவபெருமானின் வழிபாடு செய்வது பலன்களை இரட்டிப்பாக்கும்.
பிரதோஷ நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்து விட்டு அதன் பின்னர் சிவன் கோயில்களுக்குச் சென்று பிரதோஷ அபிஷேகத்திற்குப் பொருட்களை வாங்கி கொடுத்தால் தலைமுறை துன்பங்களும் விட்டு விலகும் என்பது ஐதீகமாகும்.
நந்தி தேவருக்கு அறுகம்புல் மாலை சாற்றி வழிபாடு செய்தால், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகப்படுத்தி சுபிட்சத்தைச் சிவபெருமான் அள்ளிக் கொடுப்பார் எனக் கூறப்படுகிறது.
.png)