இன்று இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் : இந்தியாவில் பார்க்க முடியுமா..?
இந்த வருடத்தின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அமாவாசை நாளில், அதாவது இன்று செப்டம்பர் 21, 2025, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். இந்த நாள் சர்வ பித்ரு அமாவாசையும் நிகழும். இத்துடன், மறுநாள் நவராத்திரி பண்டிகை தொடங்கும்.செப்டம்பர் 21 ஆம் தேதி சூரிய கிரகணம் இரவு சுமார் 11 மணிக்கு தொடங்கி அதிகாலை 3:23 மணி வரை நீடிக்கும்.
இந்த கிரகணம் ஒரு பகுதி சூரிய கிரகணமாக இருக்கும். அதாவது, சந்திரன் சூரியனின் ஒரு பகுதியை மட்டும் மறைக்கும். ஆனால், இந்தியாவில் இந்த கிரகணம் தெரியாது. 2025 செப்டம்பர் 21 அதாவது நாளை இந்த கிரகணம் நிகழும். ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இந்த கிரகணம் தெரியாது.
இந்த நிகழ்வானது இன்று இந்திய நேரப்படி இரவு 10:59 மணிக்குத் தொடங்கும். செப்டம்பர் 22 ஆம் தேதி அதிகாலை 1:11 மணிக்கு உச்சத்தை அடையும். அதிகாலை 3:23 மணிக்கு முடிவடையும். ஆனால், இந்தியாவில் அந்த நேரத்தில் சூரியன் அடிவானத்திற்கு கீழே இருக்கும். எனவே, இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது.
இந்த சூரிய கிரகணம் தெற்கு அரைக்கோளத்தில் தெரியும். கிழக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அண்டார்டிகா மற்றும் பசிபிக் தீவுகளில் வசிப்பவர்கள் இந்த கிரகணத்தை பார்க்க முடியும். அண்டார்டிகாவில், சூரியனின் பெரும்பகுதி சந்திரனின் நிழலில் மறைந்துவிடும். பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு மக்களும் இந்த கிரகணத்தை பார்ப்பார்கள்.
சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நேராக வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரிய கிரகணத்தில் முழு கிரகணம், வளைய கிரகணம், கலப்பின கிரகணம் மற்றும் பகுதி கிரகணம் என பல வகைகள் உள்ளன. 2025 செப்டம்பரில், சந்திரனின் நிழல் சூரியனை முழுமையாக மறைக்காது. இதனால், சூரியனின் ஒரு பகுதி மட்டும் மறைக்கப்படும். அதனால்தான் இது பகுதி சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
அடுத்து சூரிய கிரகணம் எப்போது?
இந்தியாவில் வசிப்பவர்கள் சூரிய கிரகணத்தை பார்க்க பொறுமையாக இருக்க வேண்டும். இந்தியாவில் அடுத்த சூரிய கிரகணம் 2027 ஆகஸ்ட் 2 அன்று தெரியும். அன்று, இந்தியாவின் பல பகுதிகளில் பிற்பகல் மற்றும் மாலை நேரத்தில் பகுதி சூரிய கிரகணம் தெரியும். இது முழு கிரகணமாக இல்லாவிட்டாலும், சூரியனின் ஒரு பகுதியை பார்ப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.
.png)