1. Home
  2. தமிழ்நாடு

இன்று தான் கடைசி நாள் : பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது எப்படி?

1

பல்வேறு முறைகேடுகளைத் தடுப்பதற்காக அனைத்து அரசு சேவைகளுமே ஆதார் இணைப்பை தற்போது கட்டாயமாக்கியுள்ளன. அதன்படி வருமான வரி செலுத்துவதற்கான முக்கிய ஆவணமான பான் எண்ணுடன் ஆதார் இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டது.

குறிப்பாக பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆதார் இணைப்புக்கான காலக்கெடு முடிவடைந்தது. அதன்பின்பும் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்குத் தாமத கட்டணமாக ரூ.1000 வசூல் செய்யப்பட்டது. பின்பு ஆதார் உடன் இணைக்கப்படாத பான் கார்டுகளை செயலற்றதாகிவிடும் என்று வருமானவரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வருமான வரி செலுத்துவோர் இன்று மே 31-ம் தேதிக்குள் தங்களது பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று வருமானவரித்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில் “வரி செலுத்துவோருக்கு ஒரு அன்பான வேண்டுகோள், வருகிற மே 31, 2024-க்குள் உங்களுடைய PAN கார்டை ஆதார் எண்ணுடன் இணைத்து விடுங்கள்… மே 31ஆம் தேதிக்குள் உங்களுடைய PAN கார்டை ஆதார் எண்ணுடன் இணைத்து விட்டால் வருமான வரி சட்டம் 1961 -இன் கீழ் உள்ள பிரிவு 206AA மற்றும் 206CC -இன் படி வசூலிக்கப்படும் அதிக வரி கழிவுத்தொகை அல்லது வரி சேகரிப்பு குறித்து நீங்கள் கவலைப்பட தேவையில்லை,” என்று வருமான வரித்துறை கூறியிருந்தது.


PAN கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது எப்படி?

  • PAN மற்றும் ஆதார் அட்டைகளை இணைக்க வரி செலுத்துவோர் முதலில் வருமான வரித்துறை இ-தாக்கல் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
  • லாகின் ID, பாஸ்வோர்ட் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி வருமான வரி துறையின் இ-தாக்கல் இணையதளத்தில் லாகின் செய்யவும்.
  • தேவையான விவரங்களை வழங்கிய பிறகு நீங்கள் ஒரு குறியீட்டையும் என்டர் செய்ய வேண்டும்.
  • இணையதளத்தில் லாகின் செய்த பிறகு உங்களுடைய பான் கார்டு உங்களின் ஆதார் எண்ணுடன் இணைக்க சொல்லும் ஒரு பாப்-அப் விண்டோவை காண்பீர்கள்.
  • அப்படி இல்லாத பட்சத்தில் Profile setting ஆப்ஷனுக்கு சென்று “Link Aadhaar” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
  • பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற விவரங்களை என்டர் செய்யவும். இந்த விவரங்களை இ-தாக்கல் போர்ட்டலில் பதிவு செய்யும் பொழுது ஏற்கனவே நீங்கள் குறிப்பிட்டிருப்பீர்கள்.
  • ஸ்கிரீனில் காணப்படும் விவரங்கள் உங்கள் ஆதார் அட்டையில் பொருந்துகிறதா என்பதை வெரிஃபை செய்யவும்.
  • விவரங்கள் பொருந்தும் பட்சத்தில் உங்களுடைய ஆதார் கார்டு எண்ணை என்டர் செய்து “link now” பட்டனை கிளிக் செய்யவும்.

Trending News

Latest News

You May Like