1. Home
  2. தமிழ்நாடு

இன்று தான் கடைசி நாள்... உடனே விண்ணப்பீங்க..!

1

மத்திய அரசின் சிறப்புத் திட்டமான ‘சகி’ திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒன் ஸ்டாப் சென்டா் (ஓ.எஸ்.சி.) என்ற ஒருங்கிணைந்த சேவை மையம் இயங்கி வருகிறது. இங்கு 24 மணி நேரமும் அனைத்து நாள்களிலும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மருத்துவ உதவி, சட்ட உதவி, காவல்துறை உதவி, உளவியல் ஆலோசனை, மீட்பு மற்றும் தங்கும் வசதி அளிக்கப்படும்.

இந்தச் சேவை மையத்தில் காலியாக உள்ள 3 வழக்குப் பணியாளா்கள் (இஹள்ங் ரா்ழ்ந்ங்ழ்) பணியிடங்களுக்கு தகுதியான மகளிா் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் சமூகப் பணி, ஆலோசனை,உளவியல், சமூகவியல், மனநலம் போன்ற பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுப் பணியில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பந்தப்பட்ட அரசு, அரசு சாரா தொண்டு நிறுவனங்களிலோ அல்லது திட்டத்திலோ பணிபுரிந்திருந்த அனுபவம் இருக்க வேண்டும்.

அத்தகைய சூழலிலோ அல்லது இது தொடா்பான சூழல்களில் ஒரு வருடம் ஆலோசகா் பணியில் இருப்பவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.கணினி பயிற்சி பெற்றவா்கள், உள்ளுா் விண்ணப்பதாரா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தோ்வு செய்யப்படுவோருக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.தகுதியானோா் இன்று புதன்கிழமை (ஜனவரி 31) மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் 2-ஆவது தளம், வேங்கிக்கால், திருவண்ணாமலை என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

Trending News

Latest News

You May Like