இன்று தான் கடைசி நாள்..! உடனே விண்ணப்பீங்க... ரேஷன் கடைகளில் சூப்பர் வேலை..!
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. நியாயவிலைக் கடைகளை பொறுத்தவரை கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படுகிறது. இந்த ரேஷன் கடைகளில் சேல்ஸ்மேன், கட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. 38 மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மொத்தமாக 3,280 பணியிடங்கள் உள்ளன.
மொத்தமாக 3,280 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. சென்னையில் மட்டும் 348 பணியிடங்கள் காலியாக உள்ளன. செங்கல்பட்டில் 184 , காஞ்சிபுரம் 51, கோவை 199, மதுரை 186, திருச்சி 129, திருநெல்வேலி 80, தென்காசி 51 என மொத்தமாக 3,280 பணியிடங்கள் உள்ளன. கல்வி தகுதியை பொறுத்தவரை சேல்ஸ்மேன் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டுநர்(packer) பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். விண்ணப்பதார்களுக்கு தமிழ் மொழியில் பேசவும், எழுதப் படிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும்.
18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. அதாவது ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு கிடையாது.
சம்பளம் எவ்வளவு?:
* சேல்ஸ்மேன் பணிக்கு முதல் ஆண்டில் மாதம் ரூ.6,250 வழங்கப்படும். ஓராண்டுக்கு பிறகு ரூ.8,600 -29,000/ வரை வழங்கப்படும். * கட்டுநர் பணிக்கு முதல் ஆண்டில் ரூ.5,500-ம், ஒரு ஆண்டு கழித்து ரூ.7,800 - 26,000-ம் கிடைக்கும்.
தேர்வு முறை:
தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக சேல்ஸ்மேன் பணிக்கு ரூ. 150 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணம் கிடையாது. கட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் ரூ.100 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தேவையான கல்வி தகுதியும் ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். சென்னையில் உள்ள ரேஷன் கடைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் https://www.drbchn.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இப்படி மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்களின் வெப்சைட் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய (district recruitment bureau-2024) இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து https://drbmadurai.net என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே 2024 நவம்பர் 7 ஆம் தேதி மாலை 5.45 வரை விண்ணப்பிக்கலாம்.