1. Home
  2. தமிழ்நாடு

இன்றே கடைசி..! உடனே ரேஷன் கடைக்கு போங்க..!

Q

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தது.
இலவச வேட்டி-சேலைகளும் ரேசனில் வழங்கப்படுகிறது.
கடந்த 9-ந் தேதி முதல் இவை வழங்கப்பட்டு வந்தது. சுமார் 75 சதவீத மக்கள் ரேசனில் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கி விட்டனர்.
சிலர் பொங்கலுக்கு சொந்த ஊருக்குச் சென்று விட்டதால் ரேசனில் பொருள் வாங்காமல் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்காத பொதுமக்கள் ரேசன் கடைக்குச் சென்று வாங்கிக் கொள்ளலாம் என்று கூட்டுறவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற இன்றே கடைசி நாளென அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like