இன்றே கடைசி..! மாதம் ₹21,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை..!
மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் 1130 கான்ஸ்டபிள் பணிகளுக்கான காலி பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் விவரங்களை பின்பற்றலாம்...
Constable/Fireman (Male)- 2024 மொத்த காலியிடங்கள்: 1130 ஆகும்.
மாநில வாரியாக உள்ள காலியிடங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ள முடியும். இந்தப் பணிக்கான ஊதியம் ₹21,700-69,100 ஆகும்.
வயது வரம்பு 30.09.2024 தேதியின்படி 18 முதல் 23க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி: ஆண்கள் குறைந்த பட்சம் 170.bசெ.மீ., உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 80 செ.மீ.அகலம் இருக்க வேண்டும். 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். (எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஆண்கள் குறைந்தபட்சம் 162.5 செ.மீ., உயரமும், மார்பளவு சாதா ரண நிலையில் 76 செ.மீ. யும் இருக்க வேண்டும். அனைத்து விண்ணப்பதா ரர்களும் உயரத்திற்கேற்ற எடை மற்றும் ஆரோக் கியமான உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும்).
தேர்வு முறை: மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை நிறுவனத்தால் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, உடல் திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரி பார்த்தலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: *கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ₹100/- பெண்கள்/எஸ்சி/ எஸ்டி/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது. இதை ஸ்டேட் வங்கி செலான் மூலம் செலுத்த வேண்டும். www.cisfrectt.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.09.2024 ஆகும்.