இன்று பவுர்ணமி..!இன்று தெரியாமல் கூட இந்த தவறை செஞ்சிடாதீங்க..!

நிலாக் காலம் எல்லாமே தமிழர்களுக்கு விழாக் காலம் என்பார்கள். ஒவ்வொரு மாதத்திலும் வரும் பவுர்ணமி தினம் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றதாக கருதப்படுகிறது. இது ஒவ்வொரு தெய்வங்களுக்குரிய முக்கிய வழிபாட்டு மற்றும் விரத நாட்களாக கொண்டாடப்படுகிறது. பவுர்ணமி நாளில் சில குறிப்பிட்ட விஷயங்களை செய்வதை நம்முடைய முன்னோர்கள் வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால் இவைகள் வெறும் பொழுதுபோக்கு மற்றும் கொண்டாட்டத்திற்காக செய்யப்படுவது என நினைத்து காலப் போக்கில் அவற்றில் நாம் மறந்து விட்டோம். ஆனால் நம்முடைய பவுர்ணமி தினத்தில் மட்டும் சில குறிப்பிட்ட வழக்கங்களை கடைபிடித்து வந்ததற்கு என்ன காரணம், பவுர்ணமிக்கு வேறு என்னவெல்லாம் சிறப்பு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பவுர்ணமி என்பது சந்திரன் தன்னுடைய 16 கலைகள் என சொல்லப்படும் முழு ஆற்றலுடன் ஒளி வீசும் முழுமை பெற்ற நாளாகும். இந்த நாளில் தெய்வங்களை வழிபடுவது, நிலவு ஒளியில் அனைவரும் அமர்ந்து சாப்பிடுவது, கோவிலுக்கு செல்வது ஆகிய பழக்கங்களை நம்முடைய முன்னோர்கள் பழக்கமாக வைத்திருந்தார்கள். இதற்கு காரணம், பவுர்ணமி தினத்தன்று இறை வழிபாடு செய்வதால் வீட்டில் அதிர்ஷ்டமும் நிறைவான செல்வமும் ஏற்படும். நிலவு ஒளி நம்மீது படும் வகையில் நிலாச்சோறு சாப்பிடுவதால் நம்முடைய உடல் ஆரோக்கியம் பெருகும். பவுர்ணமி நாளில் கோவிலுக்கு சென்று வழிபட்டால் மன அமைதி கிடைக்கும்.
நிலாச்சோறு சாப்பிடுவதற்கு பின்னால் ஆன்மிக காரணங்கள் மட்டுமின்றி, அறிவியல் காரணங்கள் பலவும் உள்ளன. அதாவது, நாம் நிலா வெளிச்சத்தில் அமர்ந்து உணவு சாப்பிடும் போது அந்த உணவுகளிலும் நிலவின் கதிர்கள் படுவது உண்டு. இது தெய்வீக தன்மையை ஏற்படுத்தும். நிலாச்சோறுக்காக வைக்கும் உணவுகள் கண்ணாடி, மண் அல்லது வெள்ளி பாத்திரங்களில் மட்டுமே வைக்க வேண்டும். மற்ற உலோகங்களில் உணவு வைத்து சாப்பிட்டால் அதன் பலன் நமக்கு கிடைக்காது. அனைவரும் ஒன்றாக சேர்ந்து உண்ணும் போது இது ஒற்றுமை உணர்வையும் ஏற்படுத்தும்.
பவுர்ணமி நாளானது சிவன், பெருமாள், லட்சுமி, அம்பாள், முருகன் என அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும். மனோகாரகனான சந்தினுக்குரிய பவுர்ணமி நாளில் விரதம் இருந்தால் மகிழ்ச்சியும், செல்வ வளமும் ஏற்படும்.
பவுர்ணமி அன்று செய்ய வேண்டியவை :
* பவுர்ணமி அன்று விரதம் இருக்க வேண்டும்.
* பெருமாளின் சத்ய நாராயணர் வடிவத்தை வழிபட வேண்டும்.
* ராதா மற்றும் கிருஷ்ணரை வழிபடுவது சிறப்பு
* இந்த நாளில் செய்யும் மந்திர ஜபம் அளவில்லாத பலனை கொடுக்கும்.
* இஷ்ட தெய்வங்களுக்கு பல விதமான உணவு வகைகளை நைவேத்தியமாக படைக்க வேண்டும்.
* புனித நதிகளில் நீராடலாம்.
பவுர்ணமி அன்று செய்யக் கூடாதவை :
* அசைவம், வெங்காயம், பூண்டு போன்ற தாமச குணம் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
* மது போன்ற போதை பொருட்களை உட்கொள்ளக் கூடாது.
* நகங்கள் மற்றும் முடியை வெட்டக் கூடாது.
* பவுர்ணமி அன்று சந்திர கிரகணம் வந்தால் அன்று சுப காரியங்கள் எதுவும் செய்யக் கூடாது.
* சந்திரன் உதயமான பிறகு குளிக்கக் கூடாது.
* சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபடக் கூடாது.