1. Home
  2. தமிழ்நாடு

இன்று வருடத்தின் முதல் பௌர்ணமி : கிரிவலம் செல்ல நினைப்பவர்கள் இந்த நேரத்தில் செல்லலாம்..!

1

திருவண்ணாமலை கிரிவலம் என்பது கைலாயத்தில் வீற்றிருக்கும் சிவ பெருமானையே சுற்றி வந்து வழிபடுவதற்கு சமமானதாகும். பிறவி துன்பங்களை போக்கி, முக்தியை அளிக்கக் கூடியது கிரிவல வழிபாடாகும். மற்ற நாட்களில் செல்வதை விட பெளர்ணமி நாளிலேயே அதிகமானவர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அந்த வகையில் 2025ம் ஆண்டின் முதல் பெளர்ணமி, ஜனவரி 13ம் தேதி வருகிறது. ஜனவரி 13ம் தேதி காலை 05.21 மணிக்கு துவங்கி, ஜனவரி 14ம் தேதி காலை 04.40 வரை பெளர்ணமி திதி உள்ளது.

2025ல் முதல் ஏகாதசி மட்டுமல்ல, முதல் பெளர்ணமியும் மிகவும் சிறப்புக்குரியது தான். காரணம், முதல் பெளர்ணமி நாமே சிவ பெருமானுக்கு மிகவும் உகந்த மார்கழி திருவாதிரையான ஆருத்ரா தரிசன நாளில், அதுவும் சிவ வழிபாட்டிற்குரிய திங்கட்கிழமையில் அமைந்துள்ளது. சிவனின் அருளை பரிபூரணமாகவும், எளிதாகவும் பெறுவதற்கு மிகவும் ஏற்ற நாள் என்பதால் பக்தர்கள் இந்த நாளை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஜனவரி மாத பெளர்ணமியில் கிரிவலம் செல்ல நினைப்பவர்கள் ஜனவரி 13ம் தேதி காலை 05.04 மணிக்கு துவங்கி, ஜனவரி 14ம் தேதி அதிகாலை 03.57 மணிக்குள் தங்களின் கிரிவலத்தை நிறைவு செய்து விட வேண்டும். இதுவே கிரிவலம் செல்ல ஏற்ற நல்ல நேரமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. போகி பண்டிகை, ஆருத்ரா தரிசனம், தை மாத பிறப்பு என பல சிறப்புகள் ஒரே நாளில் சேர்ந்து வரும் தினத்தில் திருவண்ணாமலை கிரிவலம் செல்வது அளவில்லாத பலன்களை அள்ளிக் கொடுக்கும்.

ஆருத்ரா தரிசனம் நாளில் அனைத்து சிவன் கோவில்களிலும் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடத்தப்படும். இந்த நாளில் தான் சிவ பெருமானுக்கு திருவாதிரை களி நைவேத்தியமாக படைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. சேந்தனாருக்கு அருள் செய்வதை போது ஈசன் நமக்கும் அவருடைய அருளை வழங்குவார் என்பதால் தான் இந்த நாளில் அனைத்து இடங்களிலும் களி சமைத்து படைத்து வழிபடும் வழக்கம் உள்ளது.

Trending News

Latest News

You May Like