1. Home
  2. தமிழ்நாடு

இன்று அமாவாசை..! இன்று இந்த 5 பொருட்களை தவறாமல் தானம் கொடுங்க..!

1

மாசி மாத அமாவாசையை பால்குண அமாவாசை என்றும், பால்குண மாதத்தின் நிறைவு நாள் என்றும் சொல்லுவது உண்டு. இது பித்ரு தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கான நாளாக கருதப்படுகிறது. மாசி மாத அமாவாசைமுன்னோர்களை விரதம் இருந்து வழிபட்டு, தானம் செய்து, புனித நீராடி துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கான நாளாகும். இந்த நாளில் கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புனித நதிகளில் நீராடுவதால் நாம் மட்டுமின்றி நம்முடைய முன்னோர்களும் பாவங்களில் இருந்து விடுபடுவார்கள் என சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட சிறப்பு மிக்க மாசி மாத அமாவாசை பிப்ரவரி 27ம் தேதி வருகிறது.

இந்த நாளில் 5 பொருட்களை தானம் கொடுத்தால் வறுமை, துரதிஷ்டம் போன்ற துன்பமான நிலைகளில் இருந்து விடுபட முடியும்.

1. அரிசி :

அரிசி மற்றும் தானியங்களை மாசி அமாவாசையில் தானம் அளிப்பது மிகச் சிறப்பானதாகும். அரிசி என்பது செல்வ வளத்தையும்,நிறைவையும் குறிப்பதாகும். அதே போல் தானியங்கள் என்பவை ஆரோக்கியம், செல்வ நலனுக்கான அடையாளம் ஆகும். இந்த பொருட்களை அமாவாசை அன்று பசி மற்றும் ஏழ்மையில் இருப்பவர்களுக்கு தானமாக அளிப்பதால் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைவதுடன், மகிழ்ச்சி அடையும். இது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆசிகளை பெற்றுத் தரும்.


2. எள் :

எள், மிக முக்கியமான பொருளாக இந்து சமயத்தில் கருதப்படுகிறது. இதனை மாசி மாத அமாவாசையில் தானமாக அளிப்பதால் குடும்பத்தில் அமைதியம், செல்வ வளமும் நிறையும் என்பது ஐதீகம். இது நம்முடைய முன்னோர்கள் முக்தி அடைவதற்கும், மறுபிறவி இல்லாத நிலையை அடைவதற்கும் உதவும் என சொல்லப்படுகிறது.


3. உணவு, பழங்கள் :

மாசி மாத அமாவாசை அன்று தேவைப்படுபவர்களுக்கு, பிராமணர்களுக்கு உணவு மற்றும் பழங்களை தானமாக அளிக்கலாம். இது மிக உயர்ந்த புண்ணிய பலனை தரும். அன்னதானம், தானங்களில் சிறந்த தானமாக கருதப்படுவதால் முன்னோர்களின் ஆசியும், செல்வ வளமும் கிடைக்கும். பழங்கள், ஆரோக்கியம், செழிப்பின் அடையாளமாகும்.


4. உடை :

உடை, சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றை தானமாக கொடுக்கலாம். அமாவாசை அன்று புதிதாக வாங்கிய ஆடைகளை தானமாக கொடுப்பது மிக புண்ணியமானதாகும்.


5. நெய், எண்ணெய் :

அமாவாசையில் எண்ணெய், நெய் ஆகியவற்றை தானமாக அளிப்பதும் நல்லது. நெய், வளர்ச்சியின் அடையாளமாகவும், எண்ணெய் என்பது ஞானத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. அதனால் கோவில்களுக்கு விளக்கேற்ற எண்ணெய் வாங்கிக் கொடுக்கலாம், ஏழைகளின் வீடுகள், கோவில்களில் சமைக்க வாங்கிக் கொடுப்பதால் வீட்டில் அமைதியும், நேர்மறை ஆற்றல்களும் நிறைந்திருக்கும்.

Trending News

Latest News

You May Like