1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? மாதத்தில் குறிப்பிட்ட இந்த 5 நாட்கள் வெங்காயம், பூண்டு சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது..!

1

பூண்டு, வெங்காயம் தவிர்க்க வேண்டிய அற்புத நாட்கள் :

அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது முன்னோர்களுக்கு இடும் படையலில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காமல் செய்வது சிறப்பான பலன்களை தரும். மேலும் அவர்களுக்கு பிடித்த விஷயங்களை தானம் செய்யலாம்.ஜோதிடம் வெங்காயம் மற்றும் பூண்டை ராகு கேது என்கிறது.

அத்துடன் அமாவாசையில் மாலையில் வீட்டின் உயரமான இடத்தில் தென் திசையில் முன்னோர்களை நினைத்து ஒரு விளக்கை ஏற்றி வைக்கலாம். இதன் மூலம் நமது சந்ததியினர் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் என்பது நம்பிக்கை.

பெளர்ணமி நாள் மகாலட்சுமி மற்றும் சந்திரன் ஆகியோருக்கான சிறப்பு வாய்ந்த நாள். இந்த திதியில் வழிபாடு செய்வதால் வாழ்வில் பிரகாசத்தைக் கொண்டு வரலாம்.இந்த அற்புத ஆளில் நாம் உணவில் வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் இருந்து கடவுளை பக்தியுடன் தியானிக்க வேண்டும். இந்த நாளில், உங்கள் உணவுப் பொருட்களில் வெங்காயம், பூண்டு ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.

பிரதோஷம்: பிரதோஷ நாள் விரதம் இருந்து சிவபெருமானையும், நந்தி பகவானை வணங்குவதால் சகல சௌபாக்கியங்கள் கிடைக்கும். விரதம் இல்லாதவர்கள் இந்த நாளில் வெங்காய பூண்டைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

சங்கடஹர சதுர்த்தி : விநாயகருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி நாளில் நாம் உணவில் வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்க்காத உணவை எடுத்துக் கொள்வதால் உடலில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

தசமி மற்றும் ஏகாதசி: மகா விஷ்ணுவுக்கு உகந்த தசமி மற்றும் ஏகாதசி நாட்களில் விரதமிருந்து வழிபட்டால் தீராத நோய்கள் நீங்கி, சகல செல்வங்கள் கிடைக்கும். விரதம் இல்லாவிட்டாலும் தசமி, ஏகாதசி திதியிலாவது வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை உணவில் பயன்படுத்தாமல் இருத்தல் வேண்டும்.

சித்த மருத்துவத்தில் வெங்காயம், பூண்டு ஆகியவை பல்வேறு நற்பலன்கள் தரும் மருத்துவ குணம் நிறைந்ததாகவும், உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது என கூறுகிறது.அதனால் முழுவதுமாக வெங்காயம், பூண்டு தவிர்ப்பது தவறு. இருப்பினும் மாதத்தில் குறிப்பிட்ட 5 நாட்களிலாவது வெங்காயம், பூண்டு ஆகியவை உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது அவசியம்.

 

 

Trending News

Latest News

You May Like