1. Home
  2. தமிழ்நாடு

இன்று தவெக மாநாடு..! மாநாட்டில் கலந்து கொள்ள போகும் அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் யார் யார்..?

1

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தம் கட்சி போட்டியிடும் என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார். அதற்கு முன்னோட்டமாக, கட்சியின் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடத்தப்படுகிறது. முதல் மாநாடு என்பதாலும், தமிழக மக்கள் மத்தியில் நல்ல எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்பதாலும், மாநாட்டின் ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து வருகின்றன.

கட்சி தொடங்கியுள்ள விஜய், தம் கட்சியின் நோக்கங்கள், கொள்கை திட்டங்கள் குறித்து, தொண்டர்கள் மத்தியில் இன்று உரையாற்ற இருக்கிறார். கட்சி தொடங்கிய பின் அவரது முதல் உரை என்பதால், தமிழக அரசியல் கட்சியினர் அனைவரும் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.

பஞ்ச் டயலாக் எதிர்பார்க்கும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையிலும், தற்போது உள்ள அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கட்சியை எதிர்பார்க்கும் பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் அவரது பேச்சு இருக்கும் என்கின்றனர், ரசிகர் மன்றத்தினர். இந்த மாநாட்டில், விஜய்க்கு நெருக்கமான திரையுலக கலைஞர்கள் பங்கேற்பர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத பிரபலங்கள் சிலரை கட்சியில் இணைக்க விஜய் முயற்சி எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தாமாக முன்வந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாக சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு சகாயம் தரப்பிலிருந்து எந்த விதமான மறுப்பும் வெளியாகவில்லை. அதேபோல, ஏற்கனவே இருக்கும் அரசியல் கட்சிகளில் ஒரு காலத்தில் செல்வாக்குடன் இருந்து இப்போது வெறுப்பில் இருக்கும் பழைய பிரபலங்களான வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், செஞ்சி ராமச்சந்திரன், நாஞ்சில் சம்பத், திருச்சி மாவட்டம் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. மாஜி, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மாஜி என பலரது பெயர்களும் அடிபடுகின்றன.

நடிகர் கமல் கட்சி தொடங்கிய நிகழ்ச்சியில், பல்வேறு பொது அமைப்பினர், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதேபோன்று, செல்வாக்குள்ள தனிநபர்களை மாநாட்டில் மேடையேற்றி அசத்த வேண்டும் என்பது நடிகர் விஜயின் திட்டமாக இருக்கிறது. அதை ஏற்றுக்கொண்டு கட்சியில் இணைபவர்கள் யார் யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் தான் முழு விவரம் தெரியவரும் என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்!

Trending News

Latest News

You May Like