1. Home
  2. தமிழ்நாடு

பெருந்தலைவர் காமராஜருக்கு இன்று பிறந்தநாள்..! கவிஞர் வைரமுத்து வாழ்த்து கவிதை..!

1

முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களின் 122வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்த தினத்தில் இவருக்கு பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தமிழ் சினிமா மற்றும் தமிழக எழுத்தாளருமான கவிஞர் வைரமுத்து அவர்கள் வாழ்த்துக் கவிதையொன்றை வெளியிட்டுள்ளார்.


துறவிபோல் ஒரு வாழ்வு
பொதுநலம் துறவாத தொண்டு

கஜானா தன்வசம்
கரன்சி தொடாத கரம்

இலவசமாய் வழங்கியவை
வேட்டி சேலைகள் அல்ல
பதவிகள் 

கட்டாந் தரையில்
கல்விப் பயிர் வளர்த்த
நல்லேர் உழவன்

எல்லா மழையும் பூமிக்கே
சிறுதுளி நீரையும்
சேமிப்பதில்லை வானம்

காமராஜர் வானம்

தோழர்களே!
காமராஜர் ஆட்சி அமைப்போம்
நல்ல முழக்கம்தான்

காமராஜர் ஆவோம் என்பது
அதனினும்
நல்ல திட்டம் அல்லவா?

தற்போது வைரலாகி வரும் வைரமுத்துவின் இக் கவிதையில் "கட்டாந் தரையில் கல்விப் பயிர் வளர்த்த நல்லேர் உழவன்" என காமராஜரை விளித்திருக்கும் வைரமுத்து கவிதையின் முடிவில் "காமராஜர் ஆட்சி அமைப்போம் நல்ல முழக்கம்தான் , காமராஜர் ஆவோம் என்பது அதனினும் நல்ல திட்டம் அல்லவா? " என பொது கேள்வியுடன் நிறைவு செய்துள்ளார். 

 

Trending News

Latest News

You May Like