1. Home
  2. தமிழ்நாடு

இன்று பூணூல் மாற்ற உகந்த நேரம் இதுதான்..!

1

ஆவணி அவிட்டம் என்பது பிராமண குலத்தவர்களின் மிக முக்கியமான நாளாகும். இந்த நாளில் பூணூல் மாற்றிக் கொள்ளுவது வழக்கம். ஆவணி மாதத்தில் பெளர்ணமியும், அவிட்டம் நட்சத்திரமும் இணைந்து வர நாளையே ஆவணி அவிட்டமாக கொண்டாடுகிறோம். இது வேதங்கள் அவதரித்த நாளாகவும், இந்த நாளில் தான் பெருமாள் ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து, வேதங்களை அசுரர்களிடம் இருந்து மீட்டதாகவும் புராணங்கள் சொல்கின்றன. அதனால் இதை ஹயக்ரீவ ஜெயந்தி என்றும் கொண்டாடுவது உண்டு. ஆவணி அவிட்டம் அன்று ஏதாவது கோவிலோ அல்லது நீர் நிலைகளுக்கு அருகிலோ புரோகிதர்கள் ஒரு குழுவாக அமர்ந்த மந்திரம் சொல்லி பூணூலை மாற்றிக் கொள்வார்கள்.

இப்படி பூணூல் மாற்றும் சடங்கிற்கு பிறகு, புதிதாக வேதங்கள் கற்க துவங்குபவார்கள். இதற்கு உபகர்மா என்று பெயர். கர்மா என்றால் கண்கள் என்று பொருள். உபகர்மா என்றால் நமக்கு இருக்கும் இரண்டு கண்களுடன் சேர்த்து, இறைவனை அறிவதற்கு மூன்றாவதாக ஞானம் என்ற கண் தேவை. அந்த கண்ணை வேதங்களை கற்பதின் மூலமே பெற முடியும். 

இந்த ஆண்டு ஆவணி அவிட்டம் ஆகஸ்ட் 19ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. அன்றைய தினம் அதிகாலை 03.07 மணி துவங்கி, ஆகஸ்ட் 20ம் தேதி அதிகாலை 01.09 வரை பெளர்ணமி திதி உள்ளது. அதே சமயம், அன்று காலை 09.09 மணிக்கு பிறகு தான் அவிட்டம் நட்சத்திரம் துவங்குகிறது. ஆகஸ்ட் 20ம் தேதி காலை 07.50 வரை அவிட்டம் நட்சத்திரம் உள்ளது. இருந்தாலும் பிரம்ம முகூர்த்த வேளையில் செய்யும் காரியங்களுக்கு நாள், நட்சத்திரம், கிழமை என எதுவும் பார்க்க வேண்டியதில்லை என்பார்கள். இதன் அடிப்படையில் அன்றைய தினம் அதிகாலை 04.32 மணி துவங்கி, 05.20 வரை பிரம்ம முகூர்த்தம் நன்றாக உள்ளதால் அந்த நேரத்தில் பூணூல் மாற்றிக் கொள்ளலாம் என சொல்லப்படுகிறது.பிறகு பகல் 12 மணி முதல் 1 மணி வரையும் நல்ல நேரம் இருப்பதால் இந்த நேரத்தில் பூணூல் மாற்றி கொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like