1. Home
  2. தமிழ்நாடு

இன்று ஜவஹர்லால் நேரு தந்தை மோதிலால் நேருவின் 162வது பிறந்தநாள்..!

1

சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட மோதிலால் நேருவின் பிறந்த நாளான இன்று.நாட்டின் சுதந்திரத்துக்காகத் தனது செல்வத்தை அர்ப்பணித்தவர் மோதிலால் நேரு. இவர் ஆக்ராவில் 1861 மே 6-ல் பிறந்தார்.

மோதிலால் பிறப்பதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே அவரது தந்தை கங்காதர் நேரு காலமாகிவிட்டார். இதனால் அலகா பாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியாற்றிய மோதிலாலின் அண்ணன் நந்தலால்தான் அவரை வளர்த்தார். அலகாபாத்தில் குழந்தைப் பருவத்தைக் கழித்த மோதிலால், கான்பூரில் பள்ளிப்படிப்பைத் தொடங்கினார்.

சட்டம் பயின்ற அவர் கடின உழைப்பின் மூலம் தேர்வில் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் மூத்த வழக்கறிஞர் பிரித்வி நாத் என்பவரிடம் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். அடுத்த 3 ஆண்டுகள் கழித்து தனது அண்ணன் நந்தலாலுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.

மோதிலால் நேரு இளம் வயதில் பொருளாதார ரீதியான சிரமங்களை அனுபவித்த போதும் தொழிலில் மெல்ல வளர தொடங்கியபோது முழு மூச்சாக சொத்துக்களை சேர்க்க தொடங்கினார். தன் குடும்பத்தினர் வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் பெரிதும் விரும்பினார். ஒரு கட்டத்தில் மிகப்பெரிய செல்வ சீமானாகவே வலம் வந்தார்.நீச்சல் குளத்துடன் அலகாபாதில் மிகப் பெரிய மாளிகையை உருவாக்கினார். அதற்கு 'ஆனந்த பவன்' என பெயரிட்டிருந்தார். 

அவரது மகன் ஜவஹர்லால் நேரு, மகள்கள் சரூப் (விஜயலட்சுமி பண்டிட்), கிருஷ்ணா ஆகியோர் செல்வச் செழிப்பின் வளர தொடங்கினர். மிகச் சிறந்த ஆசிரியர்களைக் வைத்து வீட்டிலேயே கல்வி, குதிரையேற்றம் உட்பட பல பயிற்சிகளை தன் குழந்தைகளுக்கு அளித்தார் மோதிலால்.

தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு பெரும் பொருள் ஈட்டியதால் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து அரசியலில் ஈடுபடும் எண்ணம் எல்லாம் மோதிலுக்கு இருக்கவில்லை. இந்த நிலையில் பிரிட்டிஷ் அரசின் தீமைகளை அவருக்கு எடுத்துச் சொன்னார் மகன் ஜவஹர்லால் நேரு. இதையடுத்தே மோதிலால் 1888-ல் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். எனினும், 1905-ல் வங்கப் பிரிவினையின்போதுதான் அவர் முழுமையாக அரசியலில் ஈடுபட்டார் என்று சொல்லலாம்.

குறிப்பாக சுதந்திர போராட்டத்தின் போது 1917-ல் அன்னிபெசன்ட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் வெகுண்டெழுந்தார் மோதிலால் நேரு. இதையடுத்து தீவிர அரசியல் போராட்டங்களில் பங்குகொண்டார் மோதிலால். ஜவாஹர்லால் நேருவின் தூண்டுதலில் காந்தியுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். காந்தியின் எளிமையால் கவரப்பட்ட மோதிலால், தனது செல்வங்கள் அனைத்தையும் துறந்தார். 2 முறை காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்தார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவராக 1919–1920 , 1928–1929 என்று  இருமுறை பதவி வகித்தார்.

காந்தியடிகளின் உப்பு சத்தியாகிரகத்தில் உடல்நிலை காரணமாக மோதிலால் நேருவால் பங்கேற்க முடியவில்லை. ஆனாலும் ஜவஹர்லர்லால் நேருவும் மோதிலால் நேருவும் இணைந்து செயல்படுவதை கண்டு அகம் மகிழந்தார் மோதிலால். இந்நிலையில் 1931 ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி காலமானார். இந்திய நாடு அடிமைத்தளத்தில் இருந்து விடுதலை பெறுவதை கண்கூடாக பார்க்க விரும்பிய மோதிலால் நேருவின் கனவு கடைசி வரை நனவாகவில்லை.

Trending News

Latest News

You May Like