1. Home
  2. தமிழ்நாடு

இன்று தை அமாவாசை : திதி கொடுக்க சரியான நேரம் இது தான்..!

1

அமாவாசை என்பது முன்னோர் வழிபாட்டிற்கு உரிய மிகச் சிறந்த நாளாகும். அதிலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற முக்கிய அமாவாசை நாட்களில் நாம் செய்யும் தர்ப்பணம், தானம், படையல், வழிபாடு ஆகியவற்றை பித்ருக்கள் நேரடியாக வந்து ஏற்பதாக ஐதீகம்.இதனால் இந்த முக்கிய அமாவாசை நாட்களில் விரதம் இருந்து நம்முடைய பித்ரு கடனை முறையாக நிறைவேற்றினால் பித்ருக்கள் நம்முடைய வழிபாடுகளை அவர்களே நேரடியாக ஏற்றுக் கொண்டு, நமக்கு ஆசி வழங்குவார்கள்.  

தை அமாவாசை நாளில் எந்த நேரத்தில் நாம் வழிபாடு செய்தால் பித்ருக்களின் ஆசிகளை பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையில் வரும் அமாவாசை என்பதால் இது கூடுதல் சிறப்புப் பெறுகிறது. பிப்ரவரி 09ம் தேதி காலை 07.53 மணிக்கு பிறகே அமாவாசை திதி துவங்குகிறது. பிப்ரவரி 10ம் தேதி காலை 04.34 மணி வரை அமாவாசை திதி உள்ளது. பிப்ரவரி 09ம் தேதி நாள் முழுவதும் அமாவாசை திதி இருந்தாலும் இந்த நாளில் எந்த நேரத்தில் நம்முடைய பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, படையல் இட்டு, விளக்கேற்றி வழிபட்டால் நம்முடைய வேண்டுதல்களை நம்முடைய பித்ருக்கள் உடனடியாக நிறைவேற்றி வைப்பார்கள் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இரைத்துச் செய்யும் வழிபாடு தர்ப்பணம் ஆகும். இது ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்யலாம். தர்ப்பணம் செய்த பின் வீட்டில் இலை போட்டு முன்னோர்களுக்கு படைத்து விட்டு, சாப்பிடுவது, பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவை அளிப்பது உள்ளிட்டவை தர்ப்பணத்தில் அடங்கும்.

அமாவாசை திதியானது பிப்ரவரி 9ஆம் தேதி காலையிலேயே துவங்கி விடுவதால் காலையிலேயே நீராடி முன்னோர்களை வணங்குவது நல்லது. திதி கொடுக்க நல்ல நேரம் காலை 9:30 மணி முதல் 10: 30 மணிக்குள் கொடுக்கலாம்.

Trending News

Latest News

You May Like