இன்று தமிழ் புத்தாண்டு : வழிபடும் நேரமும், முறையும்..!

தமிழ் வருடத்தின் முதல் நாளான சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டாக நாம் ஆண்டு தோறும் கொண்டாடுகிறோம். சூரிய பகவான் தன்னுடைய பயணத்தை 12 ராசிகளிலும் நிறைவு செய்து விட்டு, மீண்டும் முதல் ராசியான மேஷ ராசியில் தன்னுடைய பயணத்தை துவக்கும் நாளே தமிழ் புத்தாண்டாகும். குரோதி வருடம் நிறைவடைந்து அடுத்ததாக விசுவாவசு வருடம் இந்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி துவங்க உள்ளது. இந்த நாளில் நாம் செய்யும் வழிபாடுகள் ஆண்டு முழுவதும் வெற்றிகரமாக அமைய உறுதுணையாக இருக்கும்.
தமிழ் புத்தாண்டு வழிபாட்டு நேரம் :
காலை 6 முதல் 07.20 வரை
காலை 09.10 முதல் 10.20 வரை
இலை போட்டு வழிபடும் நேரம் :
பகல் 12.30 முதல் 01.30 வரை
இது சூரிய பகவானின் ஆதிக்கம் பெற்ற ஆண்டாகும். சூரிய பகவானுக்குரிய தெய்வமாக இருப்பவர் சிவ பெருமான். சூரிய பகவான், உயர் பதவி, ஆரோக்கியம், செல்வ வளம், செழிப்பு ஆகியவற்றிற்கு உரிய கிரகமாவார். அதனால் விசுவாவசு ஆண்டு வெற்றிகரமாக அமைய சிவ வழிபாட்டினை, சூரிய வழிபாட்டினையும் தினமும் செய்வது சிறப்பு. தினமும் காலையில் சூரிய உதய சமயத்தில் சூரிய நமஸ்காரம் செய்வது, சிவ வழிபாடுகளில் கலந்து கொண்டு சிவ மந்திரங்களை சொல்லி வருவதால் இந்த ஆண்டு முழுவதும் சிறப்பான பலன்களை பெற முடியும்.