1. Home
  2. தமிழ்நாடு

இன்று சண்டே..! இன்று ஆட்டுக்கறி எடுத்தால் இதை மறக்காம வாங்குங்க..!

1

ஆட்டு மண்ணீரலை, சுவரொட்டி என்று சொல்வார்கள்.. இது பச்சையாக இருக்கும்போது சுவற்றில் ஒட்டிக்கொள்ளுமாம்.. அதனால்தான், சுவரொட்டி என்று பெயர் வந்ததாம்..

 50 கிராம் மண்ணீரலில் ஒரு நாளைக்கு நமக்கு தேவையான இரும்புச்சத்துக்கள் உள்ளதாம்.. அதனால், ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்கள், இந்த மண்ணீரலை சமைத்து சாப்பிட்டால், ரத்த சோகை நீங்கும்.. நோய் நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகும்... ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.. மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்களுக்கு சுவரொட்டி ஒரு பெஸ்ட் தீர்வு..

முடக்குவாதம் உள்ளவர்களுக்கு இது ஒரு அருமருந்து. சிறுநீரக தொற்று உட்பட, சிறுநீரக பிரச்சனைகளையும், கல்லீரல் பிரச்சனைகளையும் தடுக்கும் சக்தி இந்த ஆட்டு மண்ணீரலுக்கு உண்டு.. வாய்ப்புண்‌, வயிற்றுப்புண்‌களை ஆற்றக்கூடியது இந்த சுவரொட்டி..

எப்படி சமைக்கலாம்: சூப் போல செய்து சாப்பிடலாம்.. ஆனால், உப்பு சேர்க்காமல்‌ சூப் செய்து குடிக்க வேண்டுமாம். அப்போதுதான் முழுப்பலன் கிடைக்கும் என்கிறார்கள். சுவரொட்டியை வறுவல் போல செய்து சாப்பிடலாம்... அப்படியே ஈரலை போலவே ருசியாக இருக்கும். பெரும்பாலும், வெட்டாமல் முழுதாக எடுத்துக்கொண்டு சமைப்பார்கள்.

சுவரொட்டி வறுவல்: வறுவல் செய்ய வேண்டுமானால், அதற்கு முதலில், சுவரொட்டியை குக்கரில் போட்டு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். பிறகு, ஒரு வாணலில் எண்ணெய், கடுகு, சின்ன வெங்காயம், கடுகு, பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, வதக்கி கொள்ள வேண்டும். பிறகு, மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கி, அதில், வேகவைத்த சுவரொட்டியை கொட்டி கலக்க வேண்டும்.. சிறிது நேரம் வதக்கிவிட்டு, கொத்தமல்லி தூவி இறக்கிவிடலாம். அதேபோல, இந்த சுவரொட்டியை நெருப்பில் வாட்டி சாப்பிடலாம்.. முழு சுவரொட்டியை கழுவி எடுத்து கொண்டு, அதில், உப்பு, மஞ்சள் தூள் மட்டும் சேர்த்து அடுப்பில் வாட்டி சாப்பிட்டாலே ருசியும் பலனும் அபாரமாக இருக்கும்.

அல்லது வேறு வகையிலும் சமைத்து சாப்பிடலாம்.. சுவரொட்டியின் வெளிப்புறத்தில், வெள்ளை கலரில் தோல் இருக்கும்.. அதை மட்டும் நீக்கிவிட்டு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். பிறகு, மறுபடியும், மஞ்சள் தூள், உப்பு, சேர்த்து 10 நிமிடம் அப்படியே ஊற வைத்துவிட வேண்டும்.

மிளகு மசாலா: ஒரு வாணலியை எண்ணெய் ஊற்றி, சோம்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, வதக்கி, அதில், சுவரொட்டியையும் கொட்டி, சிறிது நீரை சேர்த்து 30 நிமிடம் வேக வைக்கவேண்டும்... இறுதியாக, மிளகுத் தூள், கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவரொட்டி மிளகு மசாலா ரெடி.

Trending News

Latest News

You May Like