1. Home
  2. தமிழ்நாடு

இன்று ரக்‌ஷா பந்தன் பண்டிகை,, இன்று வங்கிகள் இயங்குமா?

1

ரக்‌ஷா பந்தன் பண்டிகை நாளில் அனைத்து மாநிலங்களிலும் வங்கிகள் மூடப்படாது. ஏனெனில் இது பொது விடுமுறை அல்ல. ஆனால் குறிப்பிட்ட இடங்களில் விடுமுறை விடப்படும். அதனால் சில மாநிலங்களில் ரக்‌ஷா பந்தன் தினத்தன்று விடுமுறை இருக்கும். சில மாநிலங்களில் விடுமுறை இருக்காது.

இன்று ஆகஸ்ட் 19ஆம் தேதி ரக்‌ஷா பந்தன், ஜூலானா பூர்ணிமா மற்றும் திரிபுராவின் மாமன்னர் வீர் விக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூர் பிறந்தநாள் வருகிறது. இதையொட்டி, திரிபுரா, குஜராத், ஒடிசா, உத்தரகாண்ட், ராஜஸ்தான், ஒடிசா, உத்தரகாண்ட், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 2024-இல் பொது விடுமுறை நாட்கள்

ஆகஸ்ட் 19 - ராக்கி பண்டிகை - உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு. ஆகஸ்ட் 24 - நான்காவது சனிக்கிழமை என்பதால் விடுமுறை ஆகஸ்ட் 25 - ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது விடுமுறை ஆகஸ்ட் 26 - கிருஷ்ண ஜென்மபூமி - பெரும்பாலான மாநிலங்களுக்கு விடுமுறை.

இணைய வங்கி சேவைகள்: என்னதான் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டாலும், அவசர காலங்களில் தேவைப்படும் தொகைக்காக அனைத்து வங்கிகளும் ஆன்லைன் இணையதளங்கள் மற்றும் மொபைல் பேங்கிங் பயன்பாடுகளை அனைத்து விடுமுறை நாட்களிலும் பயனர்களுக்கு வழங்குகிறது. மேலும் நீங்கள் எந்த ஒரு வங்கியில் உள்ள ATM-மிலும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். உள்ளூர் விதிமுறைகள் காரணமாக மாநிலத்திற்கு மாநிலம் பொது விடுமுறைகள் மாறுபடும் என்பதை வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டும். எனவே, சிறந்த திட்டமிடலுக்காக உங்கள் வங்கியின் விடுமுறை நாட்களின் பட்டியலை தெரிந்து வைத்துக் கொள்வது தேவையற்ற குழப்பத்தை உண்டாக்காமல் இருக்கும்.

Trending News

Latest News

You May Like