1. Home
  2. தமிழ்நாடு

இன்று புரட்டாசி பௌர்ணமி..! முற்பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்க...

1

ஒவ்வொரு தமிழ் மாதத்தில் வருகிற பெளர்ணமியன்றும் விசேஷமானது தான். நிலவு வானத்தில் பரிபூர்ணமாய் ஜொலிக்கப் போகும் அந்த இனிய நாளில் வழிபட்டால், ஒவ்வொரு விதமான பலன்கள் நம் வாழ்க்கை கிட்டும். அது போல, புரட்டாசி மாதத்தில் வருகின்ற பெளர்ணமியன்று அந்த சந்திரனைப் போல அன்னையின் முகம் பிரகாசமாக ஜொலிக்கும். அம்பிகையானவள் சந்திர மண்டலத்தின் அமுதமாய் அன்றைய தினம் விளங்குவாள். அதனால் தான் அம்பாளுக்கு சந்திர மண்டல மத்யகா என்ற பெயரும் உண்டு.

இந்த பெளர்ணமியன்று விரதமிருந்து அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று வில்வ அர்ச்சனை செய்து விட்டு, நெய் விளக்கேற்றுவது அத்தனை விசேஷம். ஆலயங்களுக்குச் செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடலாம்.

புரட்டாசி மாதம் வந்து விட்டாலே, அசைவ உணவுகளுக்கு தடை சொல்லி விடுகிறோம். புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பது தெரியும். பொதுவாகவே புரட்டாசி மாதத்தில் வருகின்ற அமாவாசை தினத்தை, மகாளய அமாவாசை என்று முன்னோர்களுக்கு பித்ரு காரியங்கள் செய்யும் மிக முக்கிய நாளாகப் பார்க்கிறோம். அது எத்தனை முக்க்கியமோ அதைப் போலவே இந்த மாதத்தின் பெளர்ணமியும் மிக அற்புதமான விரத நாள்.

புரட்டாசி பெளர்ணமியன்று விரதம் இருந்து சிவனை வழிபட்டால், உங்களை அறியாமல் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் எல்லாம் கூட உங்கள் கணக்கில் இருந்து கழித்துக் கொள்ளப்படும் என்பது தான் இந்த நாளின் சிறப்பு. அதோடு, இந்த பிறவியிலும் உங்களுக்குத் தேவையான செல்வங்கள் அனைத்தும் எஞ்சிய காலங்களுக்கு உங்களை வந்து சேரும். ஆடி மாதத்தில் இருந்து மார்கழி மாதம் வரை தேவர்களுக்கு இரவு காலம். அதனால் தான் இந்த காலத்தை நாம் தட்சிணாயண காலம் என்கிறோம்.

புரட்டாசி மாதம் தேவர்களின் நடுநிசியாகும். இன்றைய தினம் அம்பிகை பிரகாசமாக ஜொலிப்பாள். தேவர்கள், அம்பிகையின் திருநாமத்தை உச்சரித்தபடியே தியானமும், தவமுமாக இருந்து அவளின் பூர்ண அருளைப் பெறுவார்கள். இந்த நாளில் விரதமிருந்து அம்பிகையை வழிபட்டால் உங்கள் துன்பங்கள் அனைத்தும் விட்டு விலகியோடி, லட்சுமி கடாட்சம் கிட்டும்.

Trending News

Latest News

You May Like