இன்று நாக சதுர்த்தி : வழிபட வேண்டிய நேரமும், வழிபாட்டு முறைகளும்..!
நாகபஞ்சமி நாளில், நாக தெய்வத்திற்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இதிலும், சுக்ல பக்ஷத்தில் வரும் நாகபஞ்சமி திதிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இந்த நாளில் நாக தேவதைக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படும். இந்த நாளில் இவர்களுக்கு பாலாபிஷேகம் செய்யப்படுகிறது.
நாகபஞ்சமி நாளில் விரதம் இருக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் மனிதனுக்கு பாம்புகள் பற்றிய பயம் குறைகிறது. இது தவிர, நாக தெய்வங்களை வழிபட்ட பிறகு, நங் பஞ்சமி மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
இது தவிர, ராகு, கேதுவின் ஜாதகத்தில் உள்ளவர்கள் நாக தேவதையையும் வழிபட வேண்டும். இப்படி செய்தால் ஜாதகத்தில் வரும் பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
நாக சதுர்த்தி :
ஆகஸ்ட் 08ம் தேதி இரவு 11.47 வரை சதுர்த்தி திதி உள்ளது.
காலை - 07.35 முதல் 08.55 வரை
10.35 முதல் 11.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
கருட பஞ்சமி :
ஆகஸ்ட் 09ம் தேதி முழுவதும் பஞ்சமி திதி உள்ளது.
காலை - 9 முதல் 10.20 வரை
பகல் - 12.05 முதல் 01.05 வரை
நாக சதுர்த்தி அன்று காலையில் எழுந்து குளித்து விட்டு சொல்லப்பட்டிருக்கும் 3 நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தில் அருகில் உள்ள கோவில் அல்லது அரச மரத்தடியில் இருக்கும் நாகர் சிலைகளுக்கு பால், மஞ்சள் கொண்டு அபிஷேகம் செய்து, மலர்கள் சூட்டி வழிபட வேண்டும். " நானும் என்னுடைய, என்னுடைய வம்சத்தை சேர்ந்தவர்களும் எப்போதாவது தெரியாமல் நாகர் குலத்திற்கு ஏதாவது தீங்கு செய்திருந்தால் அதனை மன்னித்து, எங்களின் கஷ்டங்களை தீர்த்து வை" என்று சொல்லி, நம்முடைய கவலைகளை சொல்லி வழிபட வேண்டும். கோவிலுக்க செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருக்கும் நாகர் உருவத்திற்கு பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். நாகர் உருவம் இல்லை என்றால் நாகத்தை ஆபரணமாக அணிந்த சிவன், முருகன், பெருமாள், விநாயகர், அம்மன் போன்ற ஏதாவது ஒரு தெய்வத்தின் படத்திற்கு சிறிதளவு பால் படைத்து வழிபடலாம். பிறகு அந்த பாலை கால்படாத இடத்தில் மண்ணில் படும்படி ஊற்றி வேண்டும். நைவேத்தியமாக முடிந்தவற்றை செய்து படைக்கலாம். நாகர் வழிபாட்டினை ராகு கால வேளையில் செய்வத சிறப்பானதாகும். நாக பஞ்சமி வழிபாடு செய்வதால் பயம், நடுக்கம் ஆகியவை நீங்கும்.