1. Home
  2. தமிழ்நாடு

இன்று உழைப்பாளர்கள் தினம் : உழைப்பாளிகளின் தியாகத்தை மக்கள் அங்கீகரிக்க வேண்டும்...!

1

இன்று (மே 1) உழைப்பாளர் தினம். கோடீஸ்வரனுக்கும் ஏழைக்கும் நேரம் ஒரே அளவு தான். ஒரு சாண் வயிற்றுக்காக ஏழை ஓடிக் கொண்டே இருந்தால் இருப்பதை தக்கவைப்பதற்காக பணக்காரர் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த உழைப்பில் உயர்வு, தாழ்வில்லை. வீட்டுக்காக தங்களை அர்ப்பணித்து மெழுகாய் உருகி கொண்டிருக்கும் அனைவருமே கொண்டாடப்பட வேண்டியவர்கள். உழைப்புக்கு ஜாதி, மதமோ ஆண் பெண் பேதமோ இல்லை. குடும்பத்திற்காக ஆண்கள் ஓய்வின்றி உழைக்கின்றனர் என்றால் அந்த அச்சாணி முறிந்து விடாமல் காப்பதற்காக பெண்களும் வேலைசெய்து கைகொடுத்து கரைசேர்க்கின்றனர்.

இன்றைய காலக்கட்டத்தில் குடும்பத்தை சிரம மின்றி நடத்த பெண்களும் ஏதாவது கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொண்டு வருமானம் ஈட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம். தினம் தினம் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் உழைப்பாளர்களின் நேர கட்டுப்பாட்டை உணர்த்தும் வகையில், 8 மணிநேர உழைப்பு, 8 மணி நேர ஓய்வு, 8 மணிநேர உறக்கம் என்ற கோரிக்கைக்காக மே தினம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் மே முதல் நாள் உழைக்கும் தொழிலாளர்களின் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.உழைக்கும் தொழிலாளர்களின் ஓய்வுக்காக இந்த ஒரு நாள் விடுமுறை தினமாக்கப்பட்டது. 

உழைப்பே உயர்வு தரும். உழைத்து சாப்பிடும் போது கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலும் கிடைப்பதில்லை. உழைப்பின் மூலம் உழைப்பாளிகள் தேசத்திற்கு சேவையை தான் வழங்குகிறார்கள். உழைப்பாளிகள் என்ற சக்கரத்தில் தான் தேசம் என்ற தேர் ஓடுகிறது. உழைப்பாளிகளின் தியாகத்தை மக்கள் அங்கீகரிக்க வேண்டும்.

இன்று மே 1 உழைப்பாளர் தினத்தில் அனைத்து தொழிலாளர்களுக்கும்  உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். 

Trending News

Latest News

You May Like