1. Home
  2. தமிழ்நாடு

இன்று ஜூன் 01..! இன்று முதல் அமுலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்..!

1

ஜூன் மாதத்தில் டிரைவிங் லைசன்ஸ் முதல் கேஸ் சிலிண்டர் வரை, புதிய மாத தொடக்கத்தில் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. ஜூன் மாதத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழப் போகின்றன என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம்:

எண்ணெய் நிறுவனங்கள் மாதாமாதம் முதல் தேதியில்தான் கேஸ் சிலிண்டர்களின் விலைகளில் மாற்றங்களை செய்கின்றன. அதன்படி ஒவ்வொரு மாதமும் காலை 6 மணிக்கு இந்த விலை மாற்றம் வெளியாகிறது. 14.2 கிலோ எடை கொண்ட உள்நாட்டு சிலிண்டர் மற்றும் 19 கிலோ வணிக சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானிக்கும்.

ஆதார் கார்டு அப்டேட்

ஆதார் அட்டை புதுப்பித்தல் தொடர்பான தகவல்களை UIDAI அறிவித்துள்ளது. ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான தேதி ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஜூன் 14 ஆம் தேதி வரை கட்டணம் இல்லாமல் இலவசமாக ஆதார் அட்டையில் உள்ள தகவல்களில் மாற்றம் செய்துக் கொள்ளலாம்.ஆஃப்லைனில் அப்டேட் செய்தால், அதாவது ஆதார் மையத்திற்குச் சென்று அப்டேட் செய்தால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.

ஓட்டுநர் உரிமம்

ஜூன் 1ஆம் தேதி முதல் போக்குவரத்து விதிகளும் மாறுகின்றன. ஜூன் 1 முதல் ஓட்டுநர் உரிமம் பெற ஆர்டிஓவிடம் நேரடியாகச் செல்லத் தேவையில்லை. டிரைவிங் ஸ்கூலில் இருந்தும் டிஎல் தயாரித்துக்கொள்ளலாம் புதிய விதியின்படி ஆர்டிஓவிடம் சென்று சோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை. அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஓட்டுநர் நிறுவனத்தில் இருந்தும் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறலாம்.

ஜூன் 1 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும். 18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் ரூ 25 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டும். சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு விடுமுறை

 ஜூன் மாதத்தில் 10 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இவற்றில், ஞாயிறு, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை காரணமாக 6 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது. உள்ளூர் பண்டிகைகள் காரணமாக மீதமுள்ள நாட்களில் சில இடங்களில் வங்கிகள் மூடப்படும். ஜூன் 15 அன்று ராஜ சங்கராந்தி மற்றும் ஜூன் 17 அன்று ஈத்-உல்-அதா போன்ற விடுமுறைகள் இருக்கும். இவை சில மாநிலங்களைத் தவிர இந்தியாவின் அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்.

Trending News

Latest News

You May Like