இன்று தீபாவளி..! இன்று குளிக்க வெந்நீர் தான் பயன்படுத்த வேணடும் என கூறுவதன் அர்த்தம் என்ன தெரியுமா ?
தீபாவளி அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பது சாஸ்திரமாகும். மற்றும் தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு எந்த தோஷமும் கிடையாது. நல்லெண்ணெயில் லட்சுமியும், குளிப்பதற்கு பயன்படுத்தும் வென்னீரில் கங்கா தேவியும், உடலில் தேய்க்கப்படும் எண்ணெயைப் போக்குவதற்காக பயன்படுத்தும் சீயக்காய்த் தூளில் வாயு பகவானும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
குளிக்க வென்னீர்தான் பயன்படுத்த வேணடும். அத்துடன் அந்த குளிக்கும் வாளியில் மஞ்சள், சந்தனம் குங்குமம் வைக்து அதில் நீர் நிரப்பி கங்கா ஸ்நானம் செய்து நலம். தீபாவளி அனறு எண்ணை தேய்ந்து குளிப்பதையே ‘கங்காஸ்நானம்’ என்று புனிதமாக சொல்வார்கள்.
தீபாவளி தினத்தில் கங்கை அம்மன் தூய்மையான தீர்த்தங்களில் தோன்றுகிறாள். இதனால் கங்கையை நாம் நம் இல்லத்தில் இருந்தபடியே பூஜிப்பதாகாவும் ஐதீகம்
தீபாவளி அன்று புத்தாடை உடுத்துவதும் சிறந்தது. காலையில் குளித்து முடித்ததும், புத்தாடைகளை சுவாமி படத்தின் முன்பு வைத்து வணங்கி விட்டு அத்துடன் அந்த புத்தாடைகளின் ஒரு ஓரத்தில், சிறிய அளவில் மஞ்சள் வைத்த பிறகே அந்த புத்தாடையை உடுத்த வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கும். வாழ்வை வெளிச்சமாக்கும்.
தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது துஷ்ட சக்திகளை விரட்டும் என்றும் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அதனால், அன்றைய தினம் ஒவ்வொருவர் வீட்டிலும், தாங்கள் செய்த பலங்காரங்களை வைத்து, வீட்டில் விளக்கேற்று வழிபாடு செய்துவிட்டு, புத்தாண்டை அணிந்து பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும்.