1. Home
  2. தமிழ்நாடு

இன்று ஆவணி அமாவாசை : பித்ருக்களை வணங்கினால் அற்புதம் நிகழும்..!

1

நமது வேத சாஸ்திரங்கள் ஒரு வருடத்தில் மொத்தம் 96 தர்ப்பணங்கள் இருப்பதாக கூறுகின்றன. தமிழ் வருடப்பிறப்பு, சூரிய கிரகணம், அமாவாசை, மகாளய அமாவாசை உட்பட 96 தர்ப்பணங்களையும் ஒருவர் செய்வது சிறப்பான பலன்களைத் தரும் என்றும் அந்த சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன.

அனைத்துவித சுப காரியங்கள் செய்ய மிகவும் உகந்த மாதம் ஆவணி மாதம். இந்த அற்புத மாதத்தில் விநாயகர் சதுர்த்தி, ஆவணி அவிட்டம், ஆவணி அமாவாசை,பௌர்ணமி போன்ற தெய்வீக சிறப்புகள் பொருந்திய பல விசேஷங்கள் அடங்கியது.

அதிலும் குறிப்பாக ஆவணி அமாவாசை எல்லா அமாவாசைகளைப் போல முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து, முன்னோர் வழிபாடு செய்ய மிகவும் உகந்த தினம்.இந்த அற்புத நாளில் உங்கள் முன்னோர்களை நினைத்து பித்ருக்கள் வழிபாடு தர்ப்பணம் கொடுப்பதோடு, காக்கைக்கு உணவளித்து அவர்களின் ஆசி பெற உகந்த தினம்.பித்ருக்களுக்கு தர்ப்பணம், கொடுப்பதன் மூலம் பித்ரு சாபம் நீங்கி, உங்கள் வாழ்வில் பெருமகிழ்ச்சியுடன் வாழலாம்.

இந்த தினத்தில் பெற்றோர்கள் இல்லாத ஆண் எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்வது அவசியம். இந்த நாளில் காலையில் வீட்டு வாசலை சுத்தம் செய்யலாம் ஆனால் கோலம் போடக்கூடாது. வீட்டில் முன்னோர்களின் படங்களுக்கு பூக்கள் வைத்து, சந்தனம், குங்கும திலகமிடுங்கள். தீப, தூப ஆராதனை செய்யுங்கள்.அமாவாசை திதி, தர்ப்பணம் போன்றவற்றை தர இயலாதவர்கள் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.

விரதம் இருந்து முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து, அன்று வீட்டில் நீங்கள் சமைத்த உணவை முன்னோர்களுக்கு படைப்பதோடு, அந்த உணவை காகத்திற்கு வைத்து அதன் பின்னர் உணவருந்தவும். 

மேலும் இந்த இந்த ஆவணி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் தரித்திர நிலை நீங்கி சுபிட்சங்கள் பெருகும். தங்கள் வம்சத்தில் திருமணம் காலதாமதம் ஆகும் நபர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். வீண் பண விரயங்கள் ஏற்படுவது நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.

2024 ஆவணி மாதம் வரும் அமாவாசை, இந்த ஆண்டு திங்கட்கிழமை அன்று வருவதால், சோமாவதி அமாவாசை என்றும் அழைப்பர். தமிழ்நாட்டில் இந்த நாளை ஆவணி அமாவாசை என்று பொதுவாக தமிழ் மாத அடிப்படையில் அழைக்கப்படுகிறது.ஆவணி மாதம் சோமாவதி அமாவசை திதி திங்கட்கிழமை, செப்டம்பர் 2 அன்று வருகிறது. சோமாவதி அமாவாசை திதி தொடக்க நேரம்: 2 செப்டம்பர் 2024, காலை 05:21 மணிக்கு, திங்கட்கிழமை | சோமாவதி அமாவாசை திதி முடியும் நேரம்: 3செப்டம்பர் 2024, காலை 07:24 மணிக்கு, செவ்வாய்க்கிழமை ஆகும்.

Trending News

Latest News

You May Like