இன்று ஆஷுரா நோன்பு... இந்த நாளில் இஸ்லாமியர்கள் ரத்த தானம் செய்வது ஏன்?
இஸ்லாமியர்களின் நான்கு புனித மாதங்களில் புத்தாண்டின் முதல் மாதமாக வரும் மொஹ்ரமும் ஒன்றாகும். ஆனால் புத்தாண்டு பிறப்பு மற்றும் புதிய இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதம் என இந்த மாதத்தை இஸ்லாமியர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுவது கிடையாது. மாறாக துக்க மாதமாகவே கடைபிடிக்கிறார்கள். கி.பி.680 ஆம் ஆண்டு நடந்த கம்பாலா போரில் இறைத் தூதர் முகம்மது நபியின் பேரன் கொல்லப்பட்டதை நினைவு கூறும் விதமாக மொஹ்ரம் அனுஷ்டிக்கப்படுகிறது.
மொஹரம் மாதத்தின் பத்தாவது நாளையே ஆஷூரா என குறிப்பிடுகிறார்கள். இந்த நாள் முகம்மது நபியின் பேரன் கொல்லப்பட்டது மற்றும் மூசாவை இறைவன் காப்பாற்றிய நாள் என்பதால் இந்த நாள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆஷூரா நாளில் இறைத்தூதர் முகம்மது நபிகள், மெக்காவில் நோன்பு கடைபிடிப்பதை வழக்கம் வைத்திருந்தார். இதை பின்பற்றியே இன்றும் இஸ்லாமியர்கள் ஆஷூராவில் நோன்பு கடைபிடிக்கிறார்கள்.
இந்தியாவில் ஜூலை 17ம் தேதி ஆஷூராவில் மொஹரம் பண்டிகை கடைபிடிக்கப்பட உள்ளது. இந்த நாளில் முகம்மது நபியின் பேரன் ஹூசைன் இபின் அலி கொல்லப்பட்ட துக்க நாளாக ஷியா முஸ்லீம்கள் மார்பில் அடித்துக் கொண்டு ஊர்வலமாக செல்வதை பாரம்பரிய வழக்கமாக வைத்துள்ளனர்.
ஷியா முஸ்லீம்களை பொறுத்தவரை ஹூசைன் இபின் அலி கொல்லப்பட்டது அநீதியான, மனிதகுலத்திற்கு எதிரான செயலாக கருதுகிறார்கள். அவர் கொல்லப்படுவதற்கு முன் அனுபவித்த துன்பத்தை எடுத்துக் காட்டுவதற்காக ஷியா பிரிவினரில் சிலர் மார்பில் கத்தியால் கீறிக் கொண்டு, ஊர்வலமாக செல்கிறார்கள்.
ஹூசைன் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஈராக்கின் கர்பாலா நகரில் அமைக்கப்பட்டுள்ள தங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள வழிபாட்டு தலத்தில் மிகப் பெரிய ஊர்வலமும் நடத்துகிறார்கள்.
ஆஷூராவின் போது அதிகமான இஸ்லாமியர்கள் ரத்த தானம் செய்வது உண்டு. ஹூசைன் இபின் அலியின் உயிர் தியாகத்தை நினைக்கூறும் விதமாக யாரோ ஒருவரின் உயிரை காக்க அது பயன்படும் விதமாக இருக்க வேண்டும் என்பதற்காக ரத்த தானம் செய்கிறார்கள். இஸ்லாம் மதத்தை காப்பதற்காக உயிர் தியாகம் செய்தவர் ஹூசைன். அவரது நினைவாக மதத்திற்காக தங்களின் ரத்தத்தை கொடுப்பதாக பலர் கூறுகின்றனர்.
.png)