இன்று அபர ஏகாதசி..! இன்று விரதம் இருப்பதால் முற்பிறவி பாவங்கள் நீங்கும்..!
ஜேஷ்ட மாதத்தின் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு அபரா ஏகாதசி என்று பெயர். இந்த நாளில் விஷ்ணுவை வழிபட்டு விரதம் இருப்பார்கள். அபரா ஏகாதசி விரதம் இருந்தால் அனைத்து பாவமும் போய் விடும் என சொல்லப்படுகிறது. கடந்த பிறவியில் செய்த பாவங்களில் இருந்த விடுபட நினைப்பவர்கள் இந்த ஏகாதசி விரதத்தை பக்தியோட இருக்கலாம். இந்த விரதம் இருந்தால் நல்ல குணம், சந்தோஷம், செல்வம் அனைத்தும் கிடைக்கும். இந்த வருஷம் அபரா ஏகாதசி மே 23ஆம் தேதி இரவு 01.12 மணிக்கு துவங்கி, மே 23ஆம் தேதி மாலை 10.29 மணிக்கு ஏகாதசி திதி நிறைவடைகிறது. இந்த நாளில் புத ஆதித்ய ராஜ யோகமும் உண்டாகிறது. அதனால் இந்த பூஜைக்கு இன்னும் சக்தி கிடைக்கும்.
அபர ஏகாதசியின் சிறப்புகள் குறித்து பகவான் கிருஷ்ணர், யுதிஷ்டிரருக்கு விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். அபர ஏகாதசி விரதத்தை யாரெல்லாம் கடைப்பிடிக்கிறார்களோ, அவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை கிருஷ்ணர் கூறியுள்ளார். இவை பிரம்மாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன் விவரம்:
அபர ஏகாதசி விரத பலன்கள்
1. ஒரு பக்தர் கிருஷ்ணருக்கு பிரியமான தாமோதர மாதத்தில் தினமும் அதிகாலை எழுந்து நீராடி, பகவானை பிரார்த்தனை செய்வதால் என்ன பலனை அடைய முடியுமோ, அந்த பலனை அபர ஏகாதசி விரத வழிபாட்டினால் அடைய முடியும்
2. அபர ஏகாதசியன்று விரதம் இருந்து பகவானை வழிபட்டால், காசிக்கு சென்று சிவராத்திரி விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்ட பலனை பெறுவதற்கான வாயப்பு கிடைக்கும்.
3. கயாவிற்கு சென்று முன்னோர்களுக்கு திதி கொடுப்பதால் கிடைக்கும் பலனை, அபர ஏகாதசி விரதத்தின் மூலம் அடைய முடியும்.
4. கேதார்நாத், கும்பமேளாவில் புனித நீராடிய பலனை அபர ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால் எளிதாக அடையலாம்.
5. பத்ரிநாத் மற்றும் குருஷேத்திராவில் பகவானை தரிசனம் செய்த பாக்கியத்தை, மிக எளிமையாக அபர ஏகாதசி விரதம் இருந்து பகவானை வழிபடுவதன் மூலம் அடையாம்.
6. தானங்கள் செய்வதால் என்னென்ன பலன்களை அடைய முடியுமோ, அந்த பலன்கள் அபர ஏகாதசி விரதம் மற்றும் வழிபாட்டின் மூலம் கிடைக்கும்.
ஏகாதசி விரத முறை :
ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, சூரியனுக்கு தண்ணீர் படைக்க வேண்டும். விநாயகரை வணங்கி, பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பிறகு விஷ்ணுவையும், லட்சுமியையும் வணங்க வேண்டும். தெற்கு திசை பார்த்து சங்கில் அபிஷேகம் செய்ய வேண்டும். மலர்களால் அலங்கரித்து, வெண்ணெய், சர்க்கரை, இனிப்பு, துளசி இலைகளை படைத்து வழிபட வேண்டும். ஊதுபத்தி, தீபம் ஏற்றி ஆரத்தி எடுக்க வேண்டும். "ஓம் நமோ பகவதே வாசுதேவாய" மந்திரத்தை சொல்ல வேண்டும். அன்று நாள் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். முடியாதவர்கள் பழம், பால், ஜூஸ் குடிக்கலாம். மாலையில் ஏகாதசி கதையை படிக்கவோ, கேட்கவோ சொய்ய வேண்டும். அடுத்த நாள் காலையில் விஷ்ணுவை கும்பிட்டு, ஏழைகளுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.