1. Home
  2. தமிழ்நாடு

இன்று ஐப்பசி பெளர்ணமி : ஐப்பசி பெளர்ணமிக்கு அப்படி என்ன சிறப்பு தெரியுமா ?

1

மிகவும் புனிதமானதாக கருதப்படும் ஐப்பசி பெளர்ணமியை ஷ்ரத்தா பெளர்ணமி என்றும் அஸ்வினா பெளர்ணமி என்றும் அழைக்கிறோம்.

பெளர்ணமி நாளில் அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும். இந்த நாளில் திருமாலை வேண்டி சத்யநாராயண விரதம் இருப்பதும், அம்பிகைக்கு விரதம் இருப்பதும், விநாயகரை வழிபடுவதும் சிறப்பான பலனை தரும். பொதுவாகவே பெளர்ணமி விரதம் இருப்பது சிறப்பானது ஆகும். அதிலும் ஐப்பசி மாத பெளர்ணமி கூடுதல் சிறப்பானதாகும்.

பெளர்ணமி நாளில் சந்திர பகவானையும், சிவ பெருமானையும், கிருஷ்ணரையும் வழிபடுவது சிறப்பு. ஐப்பசி மாத பெளர்ணமி அன்று தான் சந்திர பகவான் தனது சாபம் முழுவதுமாக நீங்கி, பதினாறு கலைகளையும் பெற்று, முழு பொலிவுடன் பெற்று திகழ்வார். அதே போல் பகவான் கிருஷ்ணரும் பதினாறு குணங்களுடன் காட்சி தரும் நாளும் இந்த ஐப்பசி பெளர்ணமி நாளில் தான். அதனால் தான் பெளர்ணமி நாளில் ஏராளமானோர் சத்யநாராயண விரதம் இருந்து வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

ஐப்பசி பெளர்ணமி நாளில் விவசாயிகள், மகாலட்சுமியை வழிபட்டு விட்டு தங்களின் அறுவடை பணிகளை துவங்குவது வழக்கம். இதனால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மகாலட்சுமியை இந்த நாளில் மனதார, முழு பக்தியுடன் வழிபட்டால் அவர்களுக்கு மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வ வளம், அதிர்ஷ்டம், நிதி லாபம் போன்ற அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். மகாலட்சுமி, ஐப்பசி பெளர்ணமி நாளிலேயே அவதரித்ததாக சில பகுதிகளில் நம்பப்படுகிறது. இதனால் மகாலட்சுமியின் பிறந்த நாளாக இந்த நாளை கருதி, அவருக்கு விருப்பமான உணவுகளை படைத்தும், இனிப்புகள் தயார் செய்தும், வீடுகளை விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரித்தும் வழிபடுவது வழக்கம்.

ஐப்பசி பெளர்ணமி நாளில் சந்திரனுக்கு பால் பாயசம் படைத்து வழிபட வேண்டும். பெளர்ணமி அன்று சந்திரனை வழிபடுவதால் நீண்ட நாள் நோய்கள், தோல் நோய்கள், சளி, தும்மல், இருமல், ஆஸ்துமா போன்ற நோய்களில் இருந்து விடுபட முடியும். அதோடு உடல் மற்றும் மன பலம், ஆற்றல் அதிகரிக்கும்.

Trending News

Latest News

You May Like