1. Home
  2. தமிழ்நாடு

இன்று முழு சூரிய கிரகணம்.. இந்தியாவில் தெரியுமா..?

1

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நேர்க்கோட்டில் சந்திரன் ஒரு புள்ளியில் வரும். அப்போது சூரியனை மறைக்கும். இதுவே சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இதில்  முழு சூரிய கிரகணம், வளைய கிரகணம், பகுதி கிரகணம் என பல வகைகள் உள்ளன.

இந்த ஆண்டில் இன்று முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. இது கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாட்டில் மட்டுமே தெரியும். குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் 18 மாகாணங்களில் இந்த அரிய சூரிய கிரகணம் தென்படும். இந்த சூரிய கிரகணம் நிகழும் போது ஒரு சில பகுதிகளில் இருளாக காணப்படும்.

இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்கு தொடங்கி, அதிகாலை 2.22 மணிக்கு முடிகிறது. இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் இரவு நேரத்தில் தொடங்கி அதிகாலையிலேயே முடிவடைவதால், இதனை நம்மால் காண முடியாது. மேலும் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாட்டில் இந்த சூரிய கிரகணம் பிற்பகல் 3:20 மணிக்கு தென்படும். இதனால் அப்பகுதிகளில் வாழும் மக்கள் இந்த சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

சூரிய கிரகணத்தை மெக்சிகோ பசிபிக் பெருங்கடல் பகுதியில் வசிப்பவர்கள் தான் முதலில் காண்பர். இது மொத்தம் இரண்டரை மணி நேரம் நிகழும். கடந்த 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வருடம்தான் மிக நீண்ட நேரம் சூரிய கிரகணம் நிகழ்கிறது. 54 வருடங்களுக்குப் பிறகு தற்போது இந்த அரிய வகை சூரிய கிரகணம் நிகழ்வதால் இதனைக் காண மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

நாசாவின் அறிக்கைப்படி, முழு சூரிய கிரகணம் 4 நிமிடம் 27 வினாடிகள் வரை நீடிக்கும். சூரிய கிரகணத்தின் போது சந்திரன் பூமியிலிருந்து சுமார் 2.23 லட்சம் மைக்கல் தொலைவில் காணப்படும். இந்த சூரிய கிரகணம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக நேரம் நிகழ்கிறது. அப்போது பூமி மீது முழுமையாக இருள் சூழ்ந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. ஏனெனில் அவ்வாறு பார்த்தால் கண்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு ஏதுவான கண்ணாடிகளை அணிந்து பார்ப்பது பாதுகாப்பானதாக இருக்கும் எனவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like