இன்று திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஜாம்புவான்னோடை தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழா என்பது மொத்தம் 14 நாட்கள் நடக்கும். விழாவின் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும்.
முக்கிய நிகழ்ச்சி என்பது சந்தனக்கூடு விழாவாகும். இதனை காண தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் முத்துப்பேட்டை தர்காவுக்கு வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டுக்கான முத்துப்பேட்டையில் ஜாம்புவான்னோடை தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழாவையொட்டி நவம்பர் 14ம் தேதி திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கலெக்டர் சாருஸ்ரீ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், திருவாரூர் மாவட்டத்தில் இன்று நவம்பர் 13ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. முத்துப்பேட்டை ஜாம்புவான்னோடை தர்கா கந்தூரி விழாவையொட்டி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய டிசம்பர் 7 ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் வேலை நாளாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது