இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (அக்.16) அதிகாலை முதலே திண்டுக்கல் நகர் பகுதி, தாடிக்கொம்பு, பஞ்சம்பட்டி, சின்னாளப்பட்டி, சீலப்பாடி ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (அக்.16) விடுமுறை அளித்து, அந்த மாவட்ட ஆட்சியர் பூங்கோடி உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், கனமழை காரணமாக, கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால், விடுமுறை அளிப்பது குறித்து, அந்தந்த கல்வி நிறுவனங்களே முடிவெடுத்துக் கொள்ள மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவுறுத்தியுள்ளார்.
செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர் உள்ளிட்டப் பகுதிகளிலும் அதிகாலை முதலே மழை பெய்து வருவதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.