இன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை..!

கடந்தாண்டு ஜூலை, 23ம் தேதி மற்றும் ஆக., 4 ஆகிய தேதிகளில் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்த ஊழியர்கள் பணியாற்றினர்.
இரு நாட்கள் பணியாற்றியதற்காக அந்த விடுமுறை நாட்கள் ஈடு செய்யும் விதமாக விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை ஏற்று, உணவுப் பொருள் வழங்கல் துறை முதன்மை செயலர் இன்றும் (15ம் தேதி), அடுத்த மாதம் 20ம் தேதியும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நாட்களில் ரேஷன் கடைகள் முற்றிலும் இயங்காது, என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 15 மற்றும் ஜூலை 20-ம் தேதி சனிக்கிழமைகளில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.