1. Home
  2. தமிழ்நாடு

இன்று தர்ப்பணம் கொடுக்க நல்ல நேரம் இது தான்..!

1

இன்று அமாவாசை இதே நாளில்  சூரிய கிரகணமும் இணைந்து வருவதால் தர்ப்பணம் கொடுக்கலாமா? கிரகண நாளில் எந்த நேரத்தில் தர்ப்பணம் கொடுக்கலாம்? என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது

மார்ச் 29ம் தேதி இந்திய நேரப்படி பகல் 02.20 மணிக்கு துவங்கி, மாலை 04.17 மணிக்கு உச்சமடைந்து, மாலை 06.15 மணிக்கு கிரகணம் நிறைவடையும் என சொல்லப்பட்டுள்ளது. மார்ச் 28ம் தேதி இரவு 07.25 மணிக்கே அமாவாசை திதி துவங்கி, மார்ச் 29ம் தேதி மாலை 05.12 மணி வரை உள்ளது. பொதுவாக தர்ப்பணம் கொடுப்பவர்கள் சூரிய உதய நேரம் துவங்கி, உச்சிப் பொழுது வரை கொடுக்கலாம். பகல் 12 மணிக்கு பிறகு செய்யப்படும் தர்ப்பண காரியங்களை சூரிய பகவானும், முன்னோர்களும் ஏற்பதில்லை என சொல்லப்படுகிறது.

அதே போல் ராகு காலம், எமகண்டம் ஆகிய நேரங்களை தவிர்த்து தான் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பானதாகும். மார்ச் 29ம் தேதி சனிக்கிழமை என்பதால் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை ராகு காலமும், பகல் 01.30 முதல் 3 மணி வரை எமகண்டமும் உள்ளது. கிரகணம் பகல் 02.20 மணிக்கு மேல் தான் துவங்குகிறது. இதனால் கிரகணத்திற்கும், தர்ப்பணம் கொடுப்பதற்கும் தொடர்பு கிடையாது. காலை நேரத்தில் முன்னோர்களுக்குரிய தர்ப்பணம், வழிபாடு ஆகியவற்றை வழக்கம் போல் செய்யலாம். பிற்பகலில் கிரகண நேரத்தில் மந்திர ஜபம் போன்றவற்றை செய்வது சிறப்பு.

தர்ப்பணம் கொடுப்பதவர்கள் காலை 9 முதல் 10.30 வரையிலான நேரத்தை தவிர்த்து, பகல் 12 மணிக்குள்ளாக எப்போது வேண்டுமானாலும் தர்ப்பணம் கொடுக்கலாம். இலை போட்டு படைப்பவர்கள் பகல் 01.25 மணிக்கு முன்பாக வழிபாடு செய்து விட வேண்டும். அமாவாசை விரதம் இருப்பவர்கள் பகல் 2 மணிக்கு முன்பாக காகத்திற்கு உணவு வைத்து விட்டு, அவர்களும் உணவு சாப்பிட்டு முடித்து விட வேண்டும்.

Trending News

Latest News

You May Like