1. Home
  2. தமிழ்நாடு

இன்று சென்னையில் த.மா.கா. செயற்குழு கூட்டம்..!

1

தமிழகத்தில் பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு நெருக்கமானவராக கருதப்படும் ஜி.கே. வாசன், தமிழகத்தில் தனது கட்சியின் பலத்தை அறிய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக இன்று ( பிப்.12 ) சென்னையில் த.மா.கா. செயற்குழு கூட்டம் நடக்கும் என வாசன் தெரிவித்துள்ளார். 

கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், மாநில செயற் குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில துணை அமைப்பு தலைவர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் கூட்டணி தொடர்பாகவும் விவாதிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக மாவட்ட அளவில் த.மா.கா. எவ்வளவு பலம் பெற்றுள்ளது என்பது குறித்து விவாதிக்க இருப்பதாகவும், அதன் அடிப்படையில் கூட்டணி கட்சிகளிடம் தொகுதிகளை கேட்டு பெறுவது என்றும் முடிவெடுத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like