1. Home
  2. தமிழ்நாடு

இன்று கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்..!

1

பிப்ரவர், 26ஆம் தேதி புதன்கிழமையான இன்று மகாசிவராத்திரி தொடங்குகிறது. இதில் நான்கு காலை பூஜை நடைபெறும். சதுர்திசி திதியில் இன்று காலை 11:08 மணிக்கு தொடங்கும் மகாசிவராத்திரி விரதம், அடுத்த நாளான பிப்ரவரி 27ஆம் தேதி காலை 8:54 மணி அளவில் முடிவடைவதாக கூறப்படுகிறது. பக்தர்கள் அனைவரும், பிப்., 26ஆம் தேதியான இன்று காலை தான் மகாசிவராத்திரியை கொண்டாடுவர்.

விரதம் இருப்பவர்கள், இரவு சிவனுக்கான பூஜைகள் முடிந்த பிறகு மறுநாள் காலையில் அதனை முடித்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

  • அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து, சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும்.
  • ஒரு நாள் முழுக்க விரதம் இருக்க வேண்டும்.
  • சிவன் கோயிலுக்கு சென்று, ருத்ராபிஷேகத்திற்கான பொருட்களை வாங்கி கொடுக்கலாம். (பால், தேன், காசு போன்றவை)
  • ‘ஓம் சிவாய நம’ எனும் மந்திரத்தை உச்சரிக்கலாம்
  • இரவில் 4 கால பூஜையின் போது விழித்திருந்து அதை மனமுவந்து செய்யலாம்.
  • சிவராத்திரியன்று கூற வேண்டிய 8 மந்திரங்கள்:
  • சிவபெருமானுக்கு சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் 3 கண்களாக உள்ளனர். சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினமே சிவராத்திரி என்று ஒரு கருத்து உண்டு.
  • சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். எனவே எந்த அளவுக்கு ஒருவர் சிவ, சிவ…. என்று உச்சரிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் நன்மை பெறுவார்.
  • சிவராத்திரி அன்று ஒவ்வொரு ஜாம பூஜையின்போது சிவபுராணத்தை வாசிப்பது மிகுந்த நன்மை தரும். சிவராத்திரி இரவில் திருமுறை ஓதுவது மிக சிறப்பானது.
  • ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் தரவல்லது. கருட புராணம், கந்தபுராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் சிவராத்திரி மகிமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 8 பெயர்களை சிவராத்திரியன்று ஜெபிப்பது நல்லது.

1. ஸ்ரீ பவாய நம, 
2. ஸ்ரீ சர்வாய நம, 
3. ஸ்ரீ பசுபதயே நம, 
4. ஸ்ரீ ருத்ராய நம, 
5. ஸ்ரீ உக்ராய நம, 
6. ஸ்ரீ மஹாதேவாய நம, 
7. ஸ்ரீ பீமாய நம, 
8. ஸ்ரீ ஈசாராய நம

Trending News

Latest News

You May Like