1. Home
  2. தமிழ்நாடு

இன்றுமா..? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி.. சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு..!

1

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் உயர்ந்து, ரூ.6,725-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, ரூ.53,800-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,492-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 17 ரூபாய் உயர்ந்து, ரூ.5,509-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 89,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, ரூ.88,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.88.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like