1. Home
  2. தமிழ்நாடு

இன்றுமா ? ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..!

1

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 580 ரூபாய் உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 45 ரூபாய் உயர்ந்து, ரூ.6,545-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து, ரூ.52,360-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,324-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 37 ரூபாய் உயர்ந்து, ரூ.5,361-க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 10 நாள்களில் மட்டும் தங்கத்தின் விலை ₹2760 அதிகரித்துள்ளதால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 84,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு எந்த மாற்றமுமின்றி, ரூ.84,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.84.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like