1. Home
  2. தமிழ்நாடு

இன்று மதுரை வீரகனூரில் தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்: திரளாக பங்கேற்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு..!

1

 தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம். இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை.

இன்று மதுரை வீரகனூரில் தி.மு.க. மாணவரணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி மத்திய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம், அவர்களைத் திருத்துவோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். முன்னதாக, அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் பா.ஜ.க.வை கண்டித்து மதுரையில் வருகிற 18-ம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like