1. Home
  2. தமிழ்நாடு

இன்று தி.மு.க. - காங்கிரஸ் தலைவர்கள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..!

1

அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகிய மூவரும் இன்று டெல்லியில் இருந்து சென்னை வருகிறார்கள்.

விமான நிலையத்தில் இருந்து நேராக சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற குழு தலைவர் கு.செல்வபெருந்தகை, காரிய கமிட்டி உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி ஆகியோருடன் அவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள்.

பின்னர் மாலை 3 மணியளவில் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச டெல்லி தலைவர்கள், கே. எஸ்.அழகிரி, செல்வபெருந்தகை ஆகியோர் செல்கிறார்கள்.

கடந்த முறை தமிழகத்தில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதே போல் இந்த ஆண்டும் குறைந்த பட்சம் 9 தொகுதிகள் தர வேண்டும் என்று வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.  ஆளும் தி.மு.க. தரப்பில் 7 தொகுதிகள் வரை ஒதுக்க சம்மதித்து இருப்பதாக கூறப்படுகிறது.

கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பதால் பங்கீட்டில் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூட்டணி கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். எனவே நெருக்கடியான சூழ்நிலையில் டெல்லி தலைவர்கள் நேரில் அமர்ந்து பேச முடிவு செய்கிறார்கள். எனவே இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் தொகுதிகள் எண்ணிக்கையை உறுதி செய்து விடுவார்கள். அதன் பிறகு டெல்லியில் உள்ள தலைவர்கள் உறுதி செய்த பிறகு எந்தெந்த தொகுதிகளை பெறுவது என்பது பற்றி பேசப்படும் என்று கூறப்படுகிறது. 

தி.மு.க. வழங்கும் தொகுதி எண்ணிக்கையில் உடன்பாடு ஏற்பட்டால் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை வழங்கவும் திட்டமிட்டுள்ளார்கள். காங்கிரஸ்-தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடர்ந்து கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

Trending News

Latest News

You May Like