1. Home
  2. தமிழ்நாடு

இன்று கிறிஸ்துவ தேவாலயத்தில் மணிகள் அடிக்கப்படுவதில்லை..! ஏன் தெரியுமா ?

1

கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான நாளில் ஒன்று புனித வெள்ளி. ஆங்கிலத்தில் Good Friday என சொல்லப்படுவதால் பலரும் இதை கொண்டாட்டத்திற்கான நாளாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தேவ தூதன், தேவ மைந்தனான இயேசு கிறிஸ்து, உலக உயிர்களின் பாவங்களை தான் ஏற்றுக் கொண்டு, சிலுவையில் அறையப்பட்ட தியாக திருநாளாகும். இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவு கூறும் விதமாகவே புனித வெள்ளி ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

Good Friday என்ற சொல் God's Friday என்ற சொல்லில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இது இறைவனுக்கான நாள். உலக உயிர்களை பாவங்களை விடுத்து, இறைவனின் வழியில் செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் நாளாகும். இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன் யூதர்களால் துன்புறுத்தப்பட்டார். இயேசு கிறிஸ்து அனுபவித்த துயரங்களை நினைவுபடுத்தும் விதமாக கிறிஸ்தவர்கள் இந்த புனித வெள்ளிக்கு முன்பாக தவக்காலம் மேற்கொள்கிறார்கள்.

புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு, குறுத்தோலை ஞாயிறு என்றும், முந்தைய நாள் பெரிய வியாழன் என்றும் அழைக்கப்படுகிறது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாகவும், மீண்டும் மூன்றாவது நாளில் உயிர்த்து எழுந்ததாக கிறிஸ்தவர்களால் நம்பப்படும் நாளை ஈஸ்டர் என்றும் கொண்டாடுகிறார்கள். இயேசு கிறிஸ்து, தான் சிலுவையில் அரையப்பட்ட போதும், " பரமபிதாவே, தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்யும் இவர்களை மன்னியும்" என்று தான் இறைவனிடம் வேண்டினார். அதனால் புனிதவெள்ளி பாவங்களை போக்கிக் கொள்வதற்கான நாளாக கருதப்படுகிறது.

தனது ரத்தத்தால் உலக உயிர்களின் பாவங்களை இயேசு சுத்தம் செய்த புனித வெள்ளி நாளில் சிலர் முழுவதுமாக உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். கத்தோலிக்கர்கள், சிஎஸ்ஐ உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவர்களும் இந்த நாளை சோகமான நாளாகவே கடைபிடிக்கிறார்கள். இந்த நாளில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படுவது வழக்கம்.

புனித வெள்ளி நாளில் தேவாலயங்களுக்கு சென்று அங்கு நடக்கும் சிறப்பு பிரார்த்தனைகளில் மக்கள் கலந்து கொள்வார்கள். இந்த நாளில் தங்களின் பாவங்களுக்காக இயேசு கிறிஸ்துவிடம் மன்னிப்பு கேட்டு, தங்களின் பாவங்களுக்காக வருந்துகின்றனர். இறைவனும், மனித குலமும் ஒன்றுபடும் நாளாக புனித வெள்ளி பார்க்கப்படுகிறது.

இயேசு சிலுவையில் உயிர்த்தியாகம் செய்ததை நினைத்து கிறிஸ்தவர்கள் இந்த நாளை துக்கத்தில் அனுசரிக்கிறார்கள். அவர்கள் தேவாலயங்களில் ஒன்று கூடி பிரார்த்தனை செய்வார்கள். பலர் கறுப்பு ஆடை அணிந்து இறைவனின் தியாகத்தை நினைத்து பிரார்த்தனை செய்கின்றனர். புனித வெள்ளி ஒரு சோகமான நாள் என்பதால் இன்று தேவாலயத்தில் மணிகள் அடிக்கப்படுவதில்லை. இந்த மணிகளின் ஓசை தொழுகையை குறுக்கிடுகிறது. மணிகளின் மௌனம் இயேசுவின் தியாகத்தை நினைவுபடுத்துகிறது.

Trending News

Latest News

You May Like