கட்சி நிர்வாகியின் மனைவியிடம் , அத்து மீறிய அதிமுக நிர்வாகி !! வைரலாகும் ஆடியோ..

கட்சி நிர்வாகியின் மனைவியிடம் , அத்து மீறிய அதிமுக நிர்வாகி !! வைரலாகும் ஆடியோ..

கட்சி நிர்வாகியின் மனைவியிடம் , அத்து மீறிய அதிமுக நிர்வாகி !! வைரலாகும் ஆடியோ..
X

சேலம் பனமரத்துபட்டி அதிமுக ஒன்றிய செயலாளரான ஜெகநாதன். அண்மையில் ஏர்வாடி சென்றபோது அப்பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த ஒரு பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார்.

தன் ஆசைக்கு இணங்குமாறும் சொல்லி வற்புறுத்தி உள்ளார்.அதற்கு அந்த பெண் மறுத்துள்ளதாக தெரிகிறது.அதனால் அதிமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். நடந்த சம்பவம் குறித்து அந்த பெண் தனது கணவரிடம் தகவல் தெரிவிக்க , அதிர்ச்சி அடைந்த அந்த கணவர் சேலம் மாவட்ட எஸ்பி ஆபீசில் புகாரும் அளித்தார்.

ஆனால் போலீஸார் இதுவரை சம்பந்தப்பட்ட நபர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை எனக் கூறப்படுகிறது. அதனால், அதிமுக பிரமுகரின் உண்மை முகம் வெளியே தெரிய வேண்டும் என்பதற்காக அந்த பெண்ணின் கணவர் ஜெகநாதனுக்கு போன் செய்து பேசினார். அப்போது உண்மையை அவர் கக்கியபோது, அதை ஆடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த ஆடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது

Newstm.in

Next Story
Share it