1. Home
  2. தமிழ்நாடு

மக்களுக்கு ஆளுநர் ஆர். என். ரவி வேண்டுகோள்!

1

மிக்ஜம் புயலானது சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. ஆனால் இப்போதே தரைப்பகுதியில் வீசும் காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகம் என்னும் அளவிற்கு பலத்த காற்றாக வீசி வருகிறது. ஆங்காங்கே பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள், விளம்பர பலகைகள், வீட்டின் மேல் கூறைகள் போன்றவை சாய்ந்து கிடக்கின்றன. மின்சாரமும் இல்லாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. ஆங்காங்கே பாதிக்கப்பட்டவர்களை மீட்பு குழுவினர் மும்முரமாக காப்பாற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் ஆளுநர் ஆர் என் ரவி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தின் சில கிழக்கு கடற்கரையோர மாவட்டங்கள் புயலினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய, மாநில அரசு அமைப்புகள் களத்தில் தீவிரமாக செயல்படுகின்றன. மாநில அரசின் அறிவுரைகளை பின்பற்றி புயலின் பாதிப்புகள் சரி செய்யப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்ப மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்.....மக்களுக்கு ஆளுநர் ஆர் என் ரவி வேண்டுகோள்!

சென்னையில் கடந்த 47 ஆண்டுகளாக இல்லாத வகையில் 34 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 10 கிலோமீட்டர் என்ற விதத்தில் நகரும் புயல் இன்று இரவு நெல்லூர் -மசூலிப்பட்டினம் எல்லையில் கரையை கடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே புயல் கரையை முழுதாக கடக்கும் முறை இந்த கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Trending News

Latest News

You May Like