1. Home
  2. தமிழ்நாடு

இந்தக் குளிர் காலத்தில் குதிகால் வெடிப்பில் இருந்து தப்பிக்க...

1

மார்கழி மாதம் துவங்கியதுமே குளிரும் துவங்கி விட்டது. இந்தச் சீசனில் பெரும்பாலானோரின் குதிகால்களில் வெடிப்பு ஏற்படும்.

குதிகால் வெடிப்பு அதிகம் உள்ளவர்கள் குளிர் காலங்களில் உப்பு மற்றும் படிகாரம் சேர்த்து அரை வாளி வெதுவெதுப்பான நீரில் கால்களை 15 முதல் 20 நிமிடங்கள்வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் கால்களை நன்றாகத் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் கால்களில் உள்ள இறந்த செல்களை அகற்ற முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் பாதங்களில் உள்ள வெடிப்பு இரண்டு முதல் மூன்று வாரங்களில் குணமாகும்.

இரவு தூங்கும் முன் ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் கலந்து குதிகால் வெடிப்புள்ள இடத்தில் தடவவும். அதன் பலன்கள் சில நாட்களில் தெரியும்.

உங்கள் கால்களை ஈரப்பதத்துடன் வைத்திருக்க, தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு மசாஜ் செய்யவும். இதற்குப் பிறகு சாக்ஸ் அணியுங்கள். கால்களில் எண்ணெய் தடவி இரவு முழுவதும் வைத்துக் காலையில் கழுவ வேண்டும். இதனால் குதிகால் வெடிப்பு விரைவில் குணமாகும்.

பாதங்கள் நன்றாக இருக்க, வெதுவெதுப்பான நீரில் கால்களைக் கழுவிய பின் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துங்கள். இதற்குப் பிறகு சாக்ஸ் அணியுங்கள்.

இந்தப் பருவ காலத்தில் உங்கள் கால்களை நன்றாக வைத்திருக்க வீட்டிலும் செருப்பு, சாக்ஸ் அணியுங்கள். இதன் மூலம் பாதங்கள் குளிர்ச்சியடையாமல், குதிகால் நன்றாக இருக்கும்.

Trending News

Latest News

You May Like