டிஎன்பிஎஸ்சி புதிய சேர்மன் கொடுத்த செம அப்டேட்!
டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த பாலச்சந்திரன் ஓய்வு பெற்ற நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 27வது புதிய தலைவராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டார்.2028ஆம் ஆண்டு வரை எஸ்.கே.பிரபாகர் இந்த பதவியில் இருப்பார்.
இந்நிலையில், எஸ்.கே பிரபாகர் சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது, "டிஎன்பிசி தேர்வுகள் முறையாக நடத்தப்படும் என்று தலைவராக நான் உறுதியளிக்கிறேன். தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நடைமுறை சிக்கல்களை சரி செய்து, தேர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை நிச்சயமாக குறைக்கப்படும்.
டிஎன்பிஎஸ்சி வெளிப்படை தன்மையுடன் இருக்கும். தேர்வுகளின் கால அட்டவணைகள் முறைப்படுத்தப்படும். தேர்வுகள் குறிப்பிட்ட கால அட்டவணைப்படி நடத்துவதற்கும் தேர்வுகளை உடனடியாக வெளியிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையத்தில் உள்ள குறைகள் உடனடியாக களையப்படும்.
இந்த தேர்வுகளைத் தாண்டி மற்ற போட்டி தேர்வுகளையும் மாணவர்கள் எழுதுகிறார்கள். இரு தேர்வு தேதிகளும் ஒரே நாளில் இல்லாதவாறு பார்த்துக் கொள்கிறோம். கால தாமதத்தை குறைப்பது தான் எங்களது முதல் பணி. ஒவ்வொரு தேர்வுக்கும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்டு நாட்களில் தேர்வு எழுதும் நடைமுறை கொண்டுவர வேண்டும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பெரிய அளவிலான புகார்கள் இல்லாமல் தரமான முறையில் அரசு தேர்வுகளை நடத்தி வருகிறது. இதை மேலும் மேம்படுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" இவ்வாறு தெரிவித்துள்ளார்.