1. Home
  2. தமிழ்நாடு

TNPSC குரூப் 4 தேர்வு: ஒரு இடத்திற்கு 353 பேர் போட்டி!

1

இன்று கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் போன்ற 3,935 காலிப் பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு நடந்து வருகிறது.

இந்தத் தேர்வை 5 லட்சத்து 26 ஆயிரத்து 553 ஆண்கள், 8 லட்சத்து 63 ஆயிரத்து 68 பெண்கள், 117 திருநங்கைகள் என மொத்தம் 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 பேர், தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 314 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

3,935 காலிப் பணியிடங்களுக்கு 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் தேர்வு எழுதுவது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. அதாவது, ஒரு காலிப் பணியிடத்துக்கு 353 பேர் போட்டிபோடுகின்றனர். "கால் காசு சம்பளம் என்றாலும் அரசு உத்தியோகமாக இருக்க வேண்டும்" என்று பழங்காலந்தொட்டே கூறிவருவதை நாம் கேள்வி பட்டிருக்கிறோம். அதனால்தான் என்னவோ, அரசு வேலைக்கு இத்தனை பேர் மல்லுகட்டுகின்றனர்.

Trending News

Latest News

You May Like