#BREAKING : குரூப் 2 தேர்வுக்கான தேதியை அறிவித்தது TNPSC..!
குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 645 பணியிடங்களுக்கு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இன்று முதல் ஆக.13-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
கடந்த வாரம் குரூப் 4 தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.