1. Home
  2. தமிழ்நாடு

இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு.. தேர்வறைக்கு எத்தனை மணிக்கு செல்ல வேண்டும்..!

1

தமிழக அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வுகள் மூலம் நிரப்பும் பணியை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான (நேர்முக தேர்வு பதவிகள்) - II அறிவிப்பு என்பது கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இன்று (நவம்பர் 18 ), நாளை (நவம்பர் 19) என 2 நாட்கள் இந்த பணிகளுக்கான தேர்வு என்பது நடைபெற உள்ளது. இந்த தேர்வு என்பது மொத்தம் 2 அமர்வுகளாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தேர்வர்கள் வர வேண்டிய நேரம் குறித்த முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

‛‛ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு(நேர்முக தேர்வு பதவிகள்) 18.11.2024, 19.11.2024 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் காலை, மதியம் என்று மொத்தம் 2 அமர்வுகளால் நடைபெற உள்ளது. இதனால் தேர்வர்கள் காலையில் 8.30 மணிக்கும், மதியம் 1.30 மணிக்குள் வர வேண்டும்.

அதோடு சலுகை நேரமாக காலை 9 மணி வரையும், மதியம் 2 மணி வரையும் வழங்கப்படம். அதன்பிறகு காலை 9.30 மணிக்கும், மதியம் 2.30 மணிக்கும் தேர்வுகள் தொடங்கும். அனைத்து தேர்வர்களும் மேலே குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக தேர்வுக்கூடத்திற்குள் இருக்க வேண்டும். மேலே குறிப்பிட் சலுகை நேரத்திற்கு பிறகு எந்த ஒரு தேர்வரும் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

Trending News

Latest News

You May Like